பெங்களூருக்கு தப்பமுயன்ற TTF வாசன்... கொத்தாக மடக்கி கைது செய்த போலீஸ்

First Published | Oct 1, 2022, 9:18 AM IST

TTF வாசன் பெங்களூருக்கு தப்பிச்செல்ல முயன்ற நிலையில், அவரை சூலூர் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

யூடியூப் சேனல் ஒன்றை நடித்தி வருபவர் TTF வாசன். கிரிஞ்சாக பேசுவது, அதிவேகத்தில் பைக் ஓட்டுவது என அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை இவர் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவை இவர் பைக்கில் வைத்து அழைத்து சென்றபோது அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோ தான் அவருக்கு பெரும் தலைவலியாக மாறியது. அந்த வீடியோவில் அவர் பைக்கை 150 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக ஓட்டியது பதிவாகி இருந்தது. இதையடுத்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் ஓட்டியதாக கூறி TTF வாசன் மீது சூலூர் மற்றும் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதையும் படியுங்கள்...  அடேங்கப்பா.. ஒரே நாளில் இத்தனை கோடியா...! வியக்க வைக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல்

Tap to resize

வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னரும் என்கிட்ட மோத வேண்டாம் என எச்சரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு கெத்து என நினைத்து பேசி இருந்த TTF வாசனை தற்போது போலீசார் கொத்தாக கைது செய்துள்ளனர். சேலம் - கொச்சின் நெடுஞ்சாலையில் அதிவேகமாகவும், ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும் பைக் ஓட்டிய வழக்கில் TTF வாசன் கைது செய்யப்பட்டார்.

TTF வாசன் பெங்களூருக்கு தப்பிச்செல்ல முயன்ற நிலையில், அவரை சூலூர் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை காவல் நிலைய பிணையில் போலீசார் விடுவித்துள்ளனர். கைதாகி விடுதலையான பின் பேட்டியளித்த TTF வாசன், நான் பண்ணது தப்பு தான் என பேசி உள்ளதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தேசிய விருதுடன் கியூட் போஸ் கொடுத்த தியா - தேவ்... சூர்யா பேமிலியின் ஹாப்பி கிளிக்ஸ் இதோ

Latest Videos

click me!