வர உள்ள தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

நேற்று வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளே இருவரும் செய்தியாளர்களிடம் போட்டி போட்டு பேசியது மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

அதுமட்டுமின்றி காங்கிரஸ் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிடுவதால் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியில் வந்துவிட்டால் ஓட்டு கிடைக்காது. ஆகையால் மரியாதைக்குரிய அன்பு சகோதரர் கமல்ஹாசன் மே 2க்கு பிறகு புதிய திரைப்படத்தில் நடிக்க தொடங்குவார். இல்லையென்றால் அடுத்த பிக்பாஸ் சீசனுக்கு வர தொடங்குவார் என விமர்சித்தார்.

நடிகர் கமல் ஹாசன் வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது வானதி சீனிவாசனின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். “தற்போது டாக்டர் பணியை செய்துகொண்டிருப்பவர், வக்கீல் பணியை செய்து கொண்டிருப்பவர் மே 2க்கு பிறகு அந்தந்த பணிகளை செய்வார்கள்" என கூறினார்.

இன்று காலை கோவை மேற்கு தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்ட கமல் அங்குள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

பின் புலியகுளம் பகுதியில் ஆவின் பாலகம் அருகே பொது மக்களை சந்தித்து பேசிய கமல், ராமநாதபுரம் பகுதியில் உள்ள தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரின் வீர மாருதி தேகப்பயிற்சி சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

பின் அங்கு சிலம்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறுவர்களிடம் கலந்துரையாடினார். இடை, இடையே தொண்டர்கள், ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

பின்னர் உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு சென்று மீன் மார்க்கெட்டில் உள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடிய கமல், உக்கடம் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் அங்கிருந்த ஆட்டோவில் பயணித்து தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு கமல் சென்றார்.

இதேபோன்று பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான வானதி சீனிவாசன் தேர்தல் அலுவலகமான 100 அடி வீதியிலிருந்து கூட்டணி கட்சியினர் வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் ஆட்டோவிலேயே பயணித்து ஆதரவை திரட்டினார்.

பிரச்சாரம் துவங்கும் முன்பு செய்ய வேண்டிய வேலைகளையும் ஆட்டோவிலேயே சென்று செய்து வருகின்றனர். இரு வேட்பாளர்களிடம் சொகுசு கார்கள் இருந்தாலும் அதை தவிர்த்து எளிய முறையில் ஆட்டோவில் பயணித்து மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகின்றனர்.