மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகை தந்து பாஜக புதிய அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மேலும், ஈஷா மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். இதனையொட்டி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவையில் நாளை நடைபெறும் பாஜக புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு 8.50 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
25
Union Home Minister Amit Shah
அங்கு அவருக்கு கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கும் மத்திய உள்துறை அமைச்சரை தொழில் துறையினர் பலர் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து 26ம் தேதி காலை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு உள்ள பாஜகவின் புதிய மாநகர அலுவலகத்தினை அமித்ஷா திறந்து வைக்கிறார். அங்கு பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
35
Isha Foundation
அதனைத் தொடர்ந்து 26ம் தேதி இரவு பூண்டி வெள்ளிங்கிரியில் அமைந்து உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் மறுநாள் காலை தனி ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்தடையும் அமித்ஷா, தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.
45
Amit Shah Coimbatore Visit
மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சரின் வருகையையொட்டி கோவை மாநகர பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை விமான நிலையம், அவிநாசி சாலை, பீளமேடு, ஈஷா யோகா மையம் ஆகிய பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
55
Tamilnadu police
பாதுகாப்பு பணிகளுக்காக 5000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்காக அவிநாசி சாலை, பீளமேடு எல்லை தோட்டம் சாலை, தண்ணீர் பந்தல் சாலை, தொண்டாமுத்தூர் மற்றும் பூண்டி பிரதான சாலைகளில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் நாளை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.