தமிழகமே அதிர்ச்சி! 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 7 கல்லூரி மாணவர்கள்! கொதிக்கும் அண்ணாமலை!

Published : Feb 18, 2025, 01:56 PM ISTUpdated : Feb 18, 2025, 03:12 PM IST

கோவையில் 17 வயது சிறுமி சமூக வலைதளம் மூலம் பழகிய இளைஞர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
15
தமிழகமே அதிர்ச்சி! 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 7 கல்லூரி மாணவர்கள்! கொதிக்கும் அண்ணாமலை!
தமிழகமே அதிர்ச்சி! 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 7 கல்லூரி மாணவர்கள்! கொதிக்கும் அண்ணாமலை!

தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் குற்றச்சம்பவங்கள் குறையவில்லை. இதுதொடர்பாக திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் பெண்கள் தனியாக வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் 17 வயது சிறுமியை  கல்லூரி மாணவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

25

கோவையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் சில இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது. இந்நிலையில் இளைஞர்கள் குனியமுத்தூரில் உள்ள அறைக்கு வருமாறு சிறுமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அங்கு சென்ற சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

35

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி கல்லூரி மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்தது. இதையடுத்து உக்கடம் காவல்துறையினர் 7 கல்லூரி மாணவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

45
Annamalai

55
Annamalai

ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என, பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!

Recommended Stories