அதிமுக ஆட்சியின் போது வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவத்தால் அப்போது எதிர்க்கட்சியான திமுக போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது அதிமுக பிரமுகர்களின் வாரிசுகளின் பெயர்கள் அடிப்பட்டன. பண வசதி படைத்த இளைஞர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்செயல் தொடர்பாக, பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் புகார் அளித்ததன் பேரில்
சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் 2019-ம் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு, சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும், அதிமுக நிர்வாகிகளான ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.