இந்த உன்னத முயற்சியில், தமிழக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், இந்திய அரசு பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையுடன் கைகோர்த்தது. 2024-2025 கல்வியாண்டில், கோவையில் முதற்கட்டமாக 20,199 பேருக்கு எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் வெற்றிகரமாக தேர்வுகளையும் எழுதினர்.
தற்போது, இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் கோவையின் பல்வேறு பகுதிகளான மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், பேரூர், பொள்ளாச்சி, சூலூர் மற்றும் வால்பாறை போன்ற இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.