கோவை வனக்கோட்டத்தில் பறவை & பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு! 228 இனங்களில் 170 இனங்கள் இருப்பதாக தகவல்!

First Published | Nov 16, 2022, 2:37 PM IST

கோவை வனக்கோட்டத்தில் நடத்தப்பட்ட பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளுக்கான கணக்கெடுப்பில், மொத்தம் இருக்கும் 228 இனங்களில் 170 இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் T. K அஷோக் குமார் IFS தெரிவித்துள்ளார்.
 

கோவை வனக்கோட்டத்தில் இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (TNBS), கோயம்புத்தூர் இயற்கை அமைப்பு (CNS) மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியம் (WWFIndia) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
 

கோயம்புத்தூர் வனக்கோட்டம் 694 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. மதுக்கரை, போளுவம்பட்டி, கோயம்புத்தூர், பெரியநாய்க்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய பகுதிகள் அடங்கும்.
 

Tap to resize

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஓர் அங்கமாக திகழும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டம் பசுமை மாறா காடுகள், புல்வெளிகள், ஈர மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள், வறண்ட புதர்க்காடுகள் மற்றும் ஆற்றோர காடுகள் கொண்டவை.
 

நவம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் கோவை வனக்கோட்டத்தில் உள்ள வனச்சரகங்களிலும், கோவை வனத்துறை, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (TNBS), கோயம்புத்தூர் இயற்கை அமைப்பு மற்றும் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு நவம்பர் 2022 (CNS) மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியம் (WWF-India) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தியது.
 

கோவை மாவட்ட வன அலுவலர் T. K அஷோக் குமார், அவர்களின் வழிகாட்டுதல்படி 82 இயற்கை ஆர்வலர்கள் கோவை மற்றும் 68 வன அலுவலர்கள் கொண்ட 16 குழுக்கள் அமைக்கப்பட்டது.
 

வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர்கள் சி. தினேஷ் குமார், மற்றும் எம். செந்தில்குமார் மற்றும் வனச்சரக அதிகாரிகள் கணக்கெடுப்பு மேற்பார்வையிட்டனர்.
 

காடுகளில் நடைபெற்ற களப்பணிகளை இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டின் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், கன்னியாகுமரி மற்றும் சென்னை பகுதிகளை சேர்ந்த பறவை மற்றும் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
 

கேரளா, கர்நாடகம், ஆந்திரா மற்றும் புதுவை மாநிலங்களிலில் இருந்தும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். நவம்பர் 11ம் தேதி அன்று நடந்த துவக்க கூட்டத்தில் கணக்கெடுப்பின் வழிமுறைகள் பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்பட்டன.
 

கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்த பின்னர், மொத்தம் இருக்கும் 228 இனங்களில் 170 இனங்கள் கோவை வனக்கோட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் T. K அஷோக் குமார் IFS தெரிவித்தார்.
 

Latest Videos

click me!