சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை! ஐபிஎல் விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!

Published : Feb 14, 2025, 09:55 AM IST

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் ஐபிஎல் விளையாடுவாரா? என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகி இருக்கிறது. 

PREV
14
சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை! ஐபிஎல் விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!
சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை! ஐபிஎல் விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடர் முழுவதும் இளம் வீரர் சஞ்சு சாம்சன் சொதப்பலாக ஆடினார். இங்கிலாந்து தொடரில் துணை கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் 5 போட்டிகளிலும் சேர்த்து வெறும் 51 ரன்களே அடித்தார். 

இங்கிலாந்து தொடர் முழுவதும் சஞ்சு சாம்சன் அவுட் ஆன விதம் தான் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஏனெனில் இந்த தொடர் முழுவதும் சஞ்சு சாம்சன் ஒரே மாதிரியாக ஷாட் பிட்ச் பந்தில் தான் அவுட்டாகியுள்ளார். முதலாவது போட்டியில் இருந்து ஐந்தாவது போட்டி வரை இங்கிலாந்து பவுலர்கள் ஷாட் பால் போடுவதும் சஞ்சு சாம்சன் தவறான ஷாட் அடித்து பீல்டர்களின் கையில் பந்தை கொடுத்து விட்டு செல்வதும் நடந்தது.

24
சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை

இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியின்போது சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டது. ஐந்தாவது டி20 போட்டியில் பங்கேற்றபோது, ​​இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து வீச்சில் சாம்சனின் ஒரு விரலில் காயம் ஏற்பட்டது. விரலில் ஏற்பட்ட காயத்தால் சஞ்சு சாம்சன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 

சஞ்சு சாம்சன் முழுமையாக உடல் தகுதி பெற ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். இதனால் அவர் மார்ச் கடைசியில் தொடங்கும் ஐபிஎல்லில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐபிஎல்லுக்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பாதல் அதற்குள் சஞ்சு சாம்சன் முழு உடல்தகுதி பெற்று விடுவார் என தகவல்கள் கூறுகின்றன. சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருக்கிறார்.

WPL 2025: மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்! எந்த டீம் ஸ்ட்ராங்? எந்த டிவியில் பார்க்கலாம்?

34
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன்

அவர் விளையாடாமல் போனால் ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து விடும். ஆகவே சஞ்சு சாம்சன் உடல்நிலையை ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. காயம் காரணமாக ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான கேரளாவின் ரஞ்சி டிராபி காலிறுதிப் போட்டியில் சாம்சனால் பங்கேற்க முடியவில்லை.

'மினி உலகக்கோப்பை' என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், இதற்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் ஏற்கெனவே தேர்வு செய்யப்படவில்லை. 

44
ஐபிஎல் 2025 சீசன்

இந்திய அணியில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் முக்கிய விக்கெட் கீப்பர்களாக உள்ளதால் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சன் கடைசியாக இந்தியாவுக்காக 2023ம் ஆண்டு டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். அங்கு அவர் ஒரு சதம் விளாசினார். அதன்பின்பு ஓடிஐயில் விளையாடவில்லை. இப்போது இங்கிலாந்து டி20 தொடரிலும் சொதப்பியதால் அவருக்கு இந்திய அணியில் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் 2025 சீசன் மிகவும் முக்கியமானதாக மாறி விட்டது. இந்த ஐபிஎல்லில் கேப்டனாக சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி, பேட்டிங்கிலும் ஏராளமான ரன்கள் குவித்தால் தான் அடுத்து அவர் இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து நினைத்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விரைவில் குணமடைந்து ஐபிஎல்லில் விளையாட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய வீரர்கள் மனைவிகளுடன் செல்ல தடை? பிசிசிஐ அதிரடி!

Read more Photos on
click me!

Recommended Stories