2021ல் புறக்கணிப்பு; 2025ல் ஆர்சிபி கேப்டன்; யார் இந்த ரஜத் படிதார்? கேப்டனானது எப்படி?

Published : Feb 13, 2025, 02:23 PM ISTUpdated : Mar 13, 2025, 03:52 PM IST

ஐபிஎல் 2025 சீசனுக்காக ஆர்சிபி அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் யார்? கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
2021ல் புறக்கணிப்பு; 2025ல் ஆர்சிபி கேப்டன்; யார் இந்த ரஜத் படிதார்? கேப்டனானது எப்படி?
2021ல் புறக்கணிப்பு; 2025ல் ஆர்சிபி கேப்டன்; யார் இந்த ரஜத் படிதார்? கேப்டனானது எப்படி?

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. 2025 ஐபிஎல் தொடரில் ஏராளமான அணிகள் இப்போதே தயாராகி வருகின்றன. தங்கள் அணிகளின் கேப்டன்கள், அணியில் ஆடும் வீரர்கள் குறித்த பட்டியலை தயார் செய்து வருகின்றன. 2025 ஐபிஎல் தொடர்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்று ஆர்சிபி எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 

தொடக்க காலத்தில் இருந்தே ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. நீண்ட காலமாக விராட் கோலி கேப்டனாக‌ இருந்தும் ஆர்சிபியால் கோப்பையை கையில் ஏந்த முடியவில்லை. கடந்த சீசனில் டூ பிளிசிஸ் தலைமையிலும் ஆர்சிபி படுதோல்வியை தழுவியது.

ஐபிஎல் 2025: ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு; அதிரடி வீரர்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

 

24
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார்

ஆர்பிசி கேப்டனாக யார் வருவார்? என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், 2025 ஐபிஎல் சீசனுக்கான ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக அதிரடி ரஜத் படிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 31 வயதான ரஜத் படிதார் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக 27 போட்டிகளில் விளையாடி  158.85 ஸ்டிரைக் ரேட்டில் 799 ரன்கள் எடுத்துள்ளார்.வைத்துள்ளார்.

கடந்த 2024 ஐபிஎல் சீசனில் மட்டும் 15 போட்டிகளில் 395 ரன்கள் அடித்து ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்ல மிக முக்கிய காரணமாக விளங்கினார். மிடில் ஆர்டரில் ஆர்சிபி அணிக்காக தூண் போல் இருக்கும் ரஜத் படிதார், பாஸ்ட் பவுலிங் மட்டுமின்றி ஸ்பின் பவுலிங்கையும் சிறப்பாக விளையாடக் கூடியவர். 

34
யார் இந்த ரஜத் படிதார்?

2021 பெங்களூரு அணியில் ரஜத் படிதார் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. 2022 ஐபிஎல் சீசனில் அவர் மாற்று வீரராக ஆர்சிபி அணிக்குள் வந்தார். ஆனால் அந்த தொடர் முழுவதும் அசத்தியதல் ஆர்சிபி அணியில் நிரந்தரமாக இடம்பிடித்தார். 2022ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக 54 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து பிளேஆஃப்களில் சதம் அடித்த முதல் அறிமுகமில்லாத வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ரஜத் படிதார் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார், ரஞ்சி டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் சிறப்பாக விளையாடினார். இந்த சீசனின் தொடக்கத்தில் சையத் முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் ரஜத் படிதார் மத்தியப் பிரதேசத அணியின் கேப்டனாக இருந்தார். அவரது கேப்டன்சி அனைவராலும் பாராட்டப்பட்டதால் ஆர்சிபி அணி இப்போது கேப்டன் பொறுப்பை இவர் கைகளில் ஒப்படைத்துள்ளது. 

44
2025 ஐபிஎல்

2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி, யாஷ் தயாள் ஆகியோர் தக்க வைக்கப்பட்ட நிலையில், 11 கோடி ரூபாய்க்கு ரஜத் படிதாரும் தக்க வைக்கப்பட்டு இருந்தார். மற்ற ஐபிஎல் அணிகளில் இளம் வீரர்கள் கேப்டனாக சிறப்பாக செயல்படும் நிலையில் ஆர்சிபியிலும் ஒரு இளம் வீரரை கேப்டனாக நியமிக்க ஆர்சிபி அணி நிர்வாகம் விரும்பியது.

ரஜத் படிதாருக்கு முதல்தர கிரிக்கெட்டில் கேப்டன் அனுபவம் இருப்பதாலும், அழுத்தமான சூழ்நிலைகளில் இவர் சிறப்பாக பேட்டிங் செய்வதாலும் இவரை ஆர்சிபி கேப்டனாக்கியுள்ளது. புதிய கேப்டனாவது ஆர்சிபிக்கு கோப்பையை வாங்கி கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Jasprit Bumrah: ஸ்கேன் ரிப்போர்ட் சாதகமாக இருந்தும் பும்ராவை இந்திய அணியில் எடுக்காதது ஏன்?

Read more Photos on
click me!

Recommended Stories