
'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில், இந்தியா அங்கு செல்ல மறுத்து விட்டதால் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும்.
உலகக்கோப்பைக்கு அடுத்த பெரிய தொடர் என்பதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி பெற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தீவிரமாக உள்ளன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்ஸின் போது ஜஸ்பிரித் பும்ரா முதுகுப் பகுதியில் காயம் அடைந்தார். காயத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ள உடனடியாக ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்குச் சென்றார். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்து வீச வரவில்லை. இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரிலும் அவர் விளையாடவில்லை.
ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். பும்ராவின் காயம் குறித்து மருத்துவக் குழுவினரின் தகவலுக்கு பிசிசிஐ காத்திருந்தது. இதற்கிடையே ஜஸ்பிரித் பும்ரா இன்னும் 2 நாட்களில் பெங்களூருவில் உள்ள தேசிய மறுவாழ்வு அகாடமியில் (NCA)பயிற்சி பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், பும்ரா முக்கியமான தொடரில் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா! கடைசி ODIயில் இமாலய வெற்றியை பதிவு செய்த ரோகித் படை
மேலும் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாடாதது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''வெளிப்படையாக நாங்கள் பும்ராவை மிகவும் விரும்பினோம். அவரால் பெரிய தொடர்களில் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர். ஆனால் சில விஷயங்கள் நமது கைகளில் இல்லை'' என்றார்.
தொடர்ந்து பேசிய கவுதம் கம்பீர், ''பும்ரா இடம்பெறவில்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளோம். ஆனால் அவர் தொடர்பான அனைத்து விவரங்களையும் உங்களுக்குச் சொல்ல முடியாது. ஏனெனில் பும்ரா எவ்வளவு காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்பது மருத்துவ குழுவினர் தான் சொல்ல வேண்டும். பும்ரா இல்லாவிட்டாலும் ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற சில இளைஞர்கள் தங்கள் கைகளை உயர்த்தி நாட்டிற்காக ஏதாவது செய்ய இது ஒரு வாய்ப்பு. சில நேரங்களில் நீங்கள் தேடும் நல்ல வாய்ப்புகள் இவைதான்'' என்று கூறினார்.
காயத்தால் அவதிப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் எடுத்து முழுமையாக குணம் அடைந்தார். ஸ்கேன் அறிக்கைகள் அவரது முதுகில் ஏற்பட்ட காயம் 'சரி' என்று தெரிவித்த போதிலும், தேர்வாளர்கள் அவரது காயத்தால் ரிஸ்க் எடுக்க விரும்பாததால் பும்ராவை தேர்வு செய்யவில்லை. ஏனெனில் பும்ரா விரைவில் முழு பந்துவீச்சுக்கு தயாராக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் ஸ்டார்களை நேரலையில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி