ஐபிஎல் 2025: ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு; அதிரடி வீரர்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Published : Feb 13, 2025, 01:26 PM IST

ஐபிஎல் 2025 சீசனுக்காக ஆர்சிபி அணியின் புதிய கேப்டனை அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய கேப்டனுக்கு விராட் கோலி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

PREV
14
ஐபிஎல் 2025: ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு; அதிரடி வீரர்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் 2025: ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு; அதிரடி வீரர்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.  உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 2025 ஐபிஎல் தொடரில் ஏராளமான அணிகள் இப்போதே தயாராகி வருகின்றன. ஒப்பனிங் யார் விளையாட வேண்டும்? மிடில் வரிசையில் யார் விளையாட வேண்டும்? என்பது குறித்த பட்டியலை தயார் செய்து வருகின்றன. 

2025 ஐபிஎல் தொடர்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் மிக முக்கியமனாது ஆர்சிபி எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. நீண்ட காலமாக விராட் கோலி கேப்டனாக‌ இருந்தும் ஆர்சிபியால் கோப்பையை தட்டித்தூக்க முடியவில்லை. கடந்த சீசனில் டூ பிளிசிஸ் தலைமையிலும் ஆர்சிபி படுதோல்வியை தழுவியது.

24
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார்

2025ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு ஆர்சிபி கேப்டன் அறிவிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், ஆர்பிசி கேப்டனாக யார் வருவார்? என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், ஆர்சிபி அணியின் கேப்டன் இன்று அதிகாராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதாவது 2025 ஐபிஎல் சீசனுக்கான ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக அதிரடி ரஜத் படிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Jasprit Bumrah: ஸ்கேன் ரிப்போர்ட் சாதகமாக இருந்தும் பும்ராவை இந்திய அணியில் எடுக்காதது ஏன்?
 

34
ஆர்சிபி அணி

31 வயதான ரஜத் படிதார் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக  27 போட்டிகளில் விளையாடி 799 ரன்கள் எடுத்துள்ளார். 158.85 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். கடந்த 2024 ஐபிஎல் சீசனில் மட்டும் 15 போட்டிகளில் 395 ரன்கள் அடித்து ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்ல மிக முக்கிய காரணமாக விளங்கினார். மிடில் ஆர்டரில் ஆர்சிபி அணிக்காக தூண் போல் இருக்கும் ரஜத் படிதார், பாஸ்ட் பவுலிங் மட்டுமின்றி ஸ்பின் பவுலிங்கையும் சிறப்பாக விளையாடக் கூடியவர். 

44
ஐபிஎல் 2025 சீசன்

2021 பெங்களூரு அணியில் ரஜத் படிதார் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. 2022 சீசனில் ஆர்சிபி அணிக்கு மாற்று வீரராக வந்து மிகச்சிறப்பாக விளையாடினார். இதன் காரணமாக அவர் அணியில் நிரந்தரமாக இடம்பிடித்தார். இப்போது தனது கடின உழைப்பின் மூலம் கேப்டனாகிவிட்டார்.

ரஜத் படிதாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விராட் கோலி, ''நானும் மற்ற அணி உறுப்பினர்களும் உங்களுக்குப் பின்னால் இருப்போம், ரஜத். இந்த அணியில் நீங்கள் வளர்ந்த விதமும், நீங்கள் சிறப்பாக செயல்பட்ட விதமும், அனைத்து ஆர்சிபி ரசிகர்களின் இதயங்களிலும் நீங்கள் ஒரு இடத்தைப் பிடித்துள்ளீர்கள். இது மிகவும் தகுதியானது'' என்று கூறியுள்ளார். புதிய கேப்டன் ரஜத் படிதாருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபி: முழு அட்டவணை! போட்டிகள் தொடங்கும் நேரம்? எந்த டிவியில் பார்க்கலாம்?

 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories