'அஸ்வினை டீம்ல இருந்து தூக்கிட்டு இவரை சேர்க்கலாம்'; புஜாரா பரபரப்பு பேட்டி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வினை அணியில் சேர்க்காமல் இருக்கலாம் என்று இந்திய வீரர் புஜாரா கூறியுள்ளார். 

 Pujara said Ashwin should be replaced by Washington Sundar ray
India vs Australia Test Series

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில், 2 போட்டிகள் முடிந்து விட்டன. இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது.  அதே வேளையில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. 

முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் மோசமாக பேட்டிங் செய்ததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். மேலும் பும்ரா, சிராஜை தவிர 3வது மற்றும் 4வது பவுலர்கள் சரியாக பந்துவீசாததும் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

 Pujara said Ashwin should be replaced by Washington Sundar ray
India vs Australia 2nd Test

2வது டெஸ்ட்டில் 3வது பவுலரான ஹர்சித் ராணா ஓவருக்கு கிட்டதட்ட 6 ரன்கள் விட்டுக்கொடுத்ததுடன் விக்கெட்டும் எடுக்கவில்லை. இதேபோல் சுழலுக்கு சாதகமில்லாத பிட்ச்சில் 4வது பவுலரான அஸ்வினாலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் 3வது டெஸ்ட்டில் அஸ்வினுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜடேஜாவையும், ஹர்சித் ராணாவுக்கு பதில் ஆகாஷ் தீப்பை அணியில் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், 3வது டெஸ்ட்டில் அஸ்வினை அணியில் இருந்து தூக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தரை சேர்க்க வேண்டும் என இந்திய வீரர் சேட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ''ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் ஒரே ஒரு மாற்றம் நிகழலாம் என்று நினைக்கிறேன். பேட்டிங் சரியாக இல்லாததால், அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கலாம்'' என்று கூறியுள்ளார்.

களத்தில் மோதல்: முகமது சிராஜுக்கு மட்டும் அபராதம்; தப்பிய ஹெட்; ஐசிசி செய்தது சரியா?


Ashwin Bowling

3வது டெஸ்ட்டில் ஹர்ஷித் ராணாவை பிளேயிங் லெவனில் எடுக்கக்கூடாது என பலரும் வலியுறுத்தி வரும் புஜாரா அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய புஜாரா, ''ஹர்ஷித் ராணாவுக்கு பதில் வேறு ஒருவர் வர வேண்டுமா என்ன? முதல் போட்டியில் அவரை அணியில் எடுத்தீர்கள். அந்த போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டார். 

Ashwin Batting

அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர். எனது கருத்துப்படி, ஒரு போட்டியில் சரியாக செயல்படாததால் அவரை ஓரம்கட்டுவது சரியல்ல. பேட்டிங் வரிசையை வலுப்படுத்த வேண்டும் என்று அணி கருதினால் ஒரே ஒரு மாற்றமாக அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை சேர்க்கலாம்'' என்றார்.

'இது படுமோசம்; இனிமே 'இப்படி' செய்யுங்க'; ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர்கள் அட்வைஸ்!

Latest Videos

click me!