'இது படுமோசம்; இனிமே 'இப்படி' செய்யுங்க'; ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர்கள் அட்வைஸ்!
தொட்ர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ரன் அடிக்கத் தடுமாறி வரும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர்கள் ரவிசாஸ்திரி, சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தொட்ர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ரன் அடிக்கத் தடுமாறி வரும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர்கள் ரவிசாஸ்திரி, சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. ஆனால் அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடந்த நடந்த 2வது பிங்க் பால் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அந்த அணி அதை விக்கெட் இழக்காமல் சுலபமாக எட்டியது.
இந்திய அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் என அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆஸ்திரேலிய பாஸ்ட் பவுலர்களுக்கு எளிதாக தங்கள் விக்கெட்டை தாரைவார்த்ததே இந்திய அணியின் மோசமான தோல்விக்கு காரணமாகும். அதுவும் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் படுமோசமாக உள்ளது.
கடந்த 14 இன்னிங்சில் அவர் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அவர் ஆடாததால் கே.எல்.ராகுல் ஓப்பனிங்கில் களமிறங்கினார். முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடியதால் 2வது டெஸ்ட்டிலும் அவர் ஓப்பனிங்கில் களமிறக்கப்பட்டார். ஆனால் மிடில் ஆர்டரில் களம் கண்ட ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 3 ரன், 2வது இன்னிங்சில் 6 ரன் என கடுமையாக சொதப்பினார்.
WTC பைனலுக்கு இந்தியா தகுதி பெறுமா? என்ன நடக்க வேண்டும்? பாய்ஸ்ன்ட்ஸ் டேபிள் சொல்வதென்ன?
அதுவும் ஏதோ புதிதாக கிரிக்கெட்டுக்கு வந்தபோது பந்துகளை ஸ்டோக் வைக்கக் கூட அவர் தடுமாறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ரோகித் சர்மா மீண்டும் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறுகையில், ''முதல் டெஸ்ட்டில் ரோகித் சர்மா இல்லாததால் கே.எல்.ராகுல் ஓப்பனிங்கில் களமிறங்கினார். ஒப்பனிங்கில் முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 2வது டெஸ்ட்டில் சொதப்பினார். ரோகித் சர்மாவும் மிடில் ஆர்டரில் ரன் எடுக்கவில்லை. இதனால் ரோகித் சர்மா மீண்டும் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும். ஓப்பனிங்கில் அவரால் அதிரடியாக விளையாடி சதம் போன்ற பெரிய ஸ்கோர்களை அடிக்க முடியும். ராகுல் 5வது அல்லது 6வது வரிசையில் களமிறங்கலாம்'' என்றார்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ''ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் ரன் அடிக்கத் திணறுவது தெரிகிறது. அவரது உடல்மொழியே இதை பறைசாற்றுகிறது. ஆகவே ரோகித் சமார் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். ஓப்பனிங்தான் அவருக்கு பொருத்தமான இடம். ஓப்பனிங்கில் அவர் அதிக ஈடுபாட்டுடன் உற்சாகமாக விளையாடுவார்'' என்று தெரிவித்தார்.'
பிரிஸ்பேனில் குறி தவறாது'; அடித்துச் சொல்லும் ரோகித்; 3வது டெஸ்ட்டில் இந்த வீரர்கள் மாற்றம்?