70 பைக், 42 பிராண்ட் ஒப்பந்தம்: ஷாருக்கான், அமிதாப்பை ஓரம் கட்டிய தல தோனி

மகேந்திர சிங் தோனி 6 மாதங்களில் 42 பிராண்ட் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோரை விட அதிகம்.

MS Dhoni Signs 42 Brand Deals in 6 Months, Surpassing Amitabh and Shahrukh vel
மகேந்திர சிங் தோனி

கிரிக்கெட்டில் தோனியின் இடம் தனித்துவமானது. 'கேப்டன் கூல்' தோனி இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போட்டிகளில் தீவிரமாக விளையாடி வரும் 'தல' தோனி, தமிழ்நாட்டு மக்களின் கிரிக்கெட் கடவுள் என்றால் மிகையில்லை.

MS Dhoni Signs 42 Brand Deals in 6 Months, Surpassing Amitabh and Shahrukh vel
தோனி சிஎஸ்கே

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன் 41 பிராண்ட் ஒப்பந்தங்களையும், ஷாருக்கான் 34 பிராண்ட் ஒப்பந்தங்களையும் செய்திருந்தனர். ஆனால் இப்போது தோனி அவர்களை மிஞ்சிவிட்டார். சிட்ரோயன், கருடா ஏரோஸ்பேஸ், மாஸ்டர்கார்டு போன்ற பெரிய பிராண்டுகளுடன் தோனி ஒப்பந்தம் செய்துள்ளார்.


42 பிராண்ட் ஒப்பந்தங்களில் கையெழுத்து

தோனியின் சொத்துக்களைப் பற்றி கூறினால், அவரது சொந்த ஊரான ராஞ்சியில் 7 ஏக்கர் பரப்பளவில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள பண்ணை வீடும், டெஹ்ராடூனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களாவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோனியின் சொத்துக்கள்

ஹம்மர் H2, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ, ரோவர் ஃப்ரீலேண்டர், மஹிந்திரா ஸ்கார்பியோ போன்ற பல கோடி, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கார்கள் தோனியிடம் உள்ளன. ஹார்லி டேவிட்சன், டூக்காட்டி 1098, கான்ஃபெடரேட் ஹெலிகாப்டர் உட்பட சுமார் 70 வகையான பைக்குகள் தோனியின் வீட்டை அலங்கரிக்கின்றன.

Latest Videos

click me!