இந்தியாவிற்கு முதல் கோல்டு பெற்று தந்த 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா..! பரபரப்பான தருணங்களின் புகைப்பட தொகுப்பு..!

First Published Aug 7, 2021, 6:19 PM IST

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில்,  ஈட்டி எரித்தலில்  நீரஜ் சோப்ரா சுதந்திர இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று தந்த, முதல் தடகள வீரர் என்கிற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அந்த பரபரப்பான தருணங்களின் புகைப்பட தொகுப்பு இதோ...  
 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி தற்போது மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. இதுவரை இந்தியா 2  வெள்ளி மற்றும் நான்கு வெங்கலம் பெற்றுள்ள நிலையில் ஒரு தங்கம் கூட பெறாமல் இருந்தது.

இந்நிலையில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா என்கிற 23 வயதே ஆகும் விளையாட்டு வீரர் தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த கனவையும் நிறைவேற்றியுள்ளார்.

இன்று நடைபெற்ற பைனலில் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், ஜெர்மனியின் ஜூலியர் வெபர், ஜோகனஸ் வெட்டர் உட்பட 12 பேர் பங்கேற்றனர். 

neeraj chopra

ஒவ்வொரு வீரருக்கும் தலா 6 வாய்ப்பு வழங்கப்பட்டன. 

முதல் வாய்ப்பில் 87.03 மீ., துாரம் எறிந்த நீரஜ், 2வது வாய்ப்பில் அதிகபட்சமாக 87.58 மீ., துாரம் எறிந்து முதலிடத்தை பிடித்தார். 

தொடர்ந்து முதலிடத்திலேயே இருந்து வந்த நீரஜ் சோப்ரா... கண்டிப்பாக தங்கம் வெல்ல வேண்டும் என்பதே இந்திய மக்களின் பிராத்தனையாகவும் மாறியது.

மற்ற வீரர்கள் போராடியும், இவர் எட்டிய தூரத்தை கடக்க முடியாததால், இந்தியாவிற்கு முதல் தங்கம் கிடைத்தது. 2 வெள்ளி, 4 வெண்கலம் என, 6 பதக்கங்களுடன் 66 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது தங்கம் வென்றுள்ளதால் 7 பதக்கங்களுடன் 47 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தடகள போட்டியில் முதல் தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

click me!