சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி விளையாட உள்ள நிலையில், மும்பையிலிருந்து விராட் கோலி ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் பேட்டிங் ஆர்டரில் பலம் வாய்ந்த அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு திகழ்கிறது. அப்படியிருந்தும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்காக போராடி வருகிறது. இந்த சீசனை தோல்வியோடு தொடங்கிய ஆர்சிபி, 2ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால், அதன் பிறகு நடந்த 6 போட்டிகளிலும் வரிசையாக தோல்வியை சந்தித்துள்ளது.
இதுவரையில் ஆர்சிபி விளையாடிய 8 போட்டிகளில் 7ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தாவில் நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 222/6 ரன்கள் குவித்தது. பின்னர் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Virat Kohli on the way to Hyderabad for the Next Game. ❤️ pic.twitter.com/y9b1qe5J5b
— virat_kohli_18_club (@KohliSensation)
இந்தப் போட்டியைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வரும் 25 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்காக ஆர்சிபி வீரர்கள் ஹைதராபாத் சென்றுள்ளனர். இந்த நிலையில் தான் விராட் கோலி மட்டும் இன்று மும்பை வந்து அங்கிருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சீசனில் இதுவரையில் விராட் கோலி விளையாடிய 8 போட்டிகளில் 379 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 113* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். மேலும், அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்பும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Virat Kohli has arrived in Hyderabad.
- THE 🐐 IS HERE...!!!! pic.twitter.com/B5vEX3tmX4