
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 39ஆவது லீக் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே அணியில் அஜிங்க்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், ரஹானே லக்னோ வீரர் மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரிலேயே 1 ரன்னில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டேரில் மிட்செல் களமிறங்கினார். 2ஆவது ஓவரை மோசின் கான் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய மிட்செல், 2ஆவது பந்தில் அடுத்த பந்து ஷார்ட் தேர்டு மேன் திசைக்கு கேட்சிற்கு சென்றது. அங்கு பீல்டிங்கில் நின்றிருந்த யாஷ் தாக்கூர் கேட்சை கோட்டைவிட்டார். அப்போது அவர் 4 ரன்களில் இருந்தார்.
எனினும், அடுத்து பந்து வீச வந்த யாஷ் தாக்கூர் ஓவரில் 5.2ஆவது பந்தில் தீபக் கூடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். தற்போது வரையில் சிஎஸ்கே 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்துள்ளது.