நண்பனுக்காக வீட்டில் உயர்ரக கஞ்சாவை பதுக்கிவைத்த பெண் ஐடி ஊழியர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

By Ajmal KhanFirst Published Apr 25, 2024, 11:06 AM IST
Highlights

அசாம் மாநிலத்தை சேர்ந்த உயர்ரக கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கஞ்சா கடந்தி வந்த பெண் ஐடி ஊழியரின் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

கஞ்சா பதுக்கல்- போலீசார் சோதனை

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்தாகவும், இதன் காரணமாக கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் தொடர்ந்து புகார் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விநியோகத்தை கட்டுப்படுத்த சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

சென்னை சூளைமேடு சக்திவேல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக சூளைமேடு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பை நோட்டமிட்டனர். போலீசார் நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பு சென்று சோதனை செய்ததில் அசாம் மாநில நியூஸ் பேப்பர் சுற்றப்பட்டு ஒரு பண்டல் இருந்துள்ளது. 

1.3 கிலோ கஞ்சா பறிமுதல்

அதனை பிரித்து பார்த்த போது, முழு இலையுடன் கூடிய முதல் ரக அசாம் கஞ்சா இருந்துள்ளது. இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளம் பெண்ணை கைது செய்து காவலில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஷர்மிளா(25) என்பதும் ஓ.எம் ஆர் சாலையில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. கஞ்சாவிற்கும் தனக்கும் எந்த வித தொடர்பு இல்லையென தெரிவித்தவர் தனது நண்பர் கொடுத்த பார்சலை மட்டுமே தான் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

பெண் ஐடி ஊழியர் கைது

இதனையடுத்து திருத்தணியை சேர்ந்த ஹர்மிளாவின்  நண்பர் சுரேஷ் கஞ்சா கொடுத்து வைத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் ஷர்மிளா மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த  சுரேஷ்சை போலீஸார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்க முயன்ற ஆசாமி; சுற்றி வளைத்த போலீஸ் - செங்குன்றத்தில் பரபரப்பு

click me!