ஐபிஎல் GOAT இவங்கதான்! IPL ஆல் டைம் பிளேயிங் லெவன்! கேப்டன் யார் தெரியுமா?
ஐபிஎல்லில் கிரிக்கெட்டில் மிகப்பெரும் சாதனைகளை படைத்த வீரர்களை வைத்து ஐபிஎல் ஆல் டைம் பிளேயிங் லெவனை உருவாக்கியுள்ளோம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐபிஎல்லில் கிரிக்கெட்டில் மிகப்பெரும் சாதனைகளை படைத்த வீரர்களை வைத்து ஐபிஎல் ஆல் டைம் பிளேயிங் லெவனை உருவாக்கியுள்ளோம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
IPL All Time Playing Eleven: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் நாளை (மார்ச் 22) முதல் தொடங்குகிறது. கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடந்து வரும் நிலையில், ஐபிஎல்லில் ஆல் டைம் பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.
1. ரோஹித் சர்மா
ஐபிஎல்லின் சிறந்த கேப்டனும், அதிரடி வீரருமான ரோகித் சர்மா 257 போட்டிகளில் விளையாடி 2 சதங்களுடன் 6628 ரன்கள் குவித்துள்ளார். பவர்பிளேயில் வெளுத்து வாங்கும் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அண்மையில் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபியும் வென்று கொடுத்தார். தனது கேப்டன்சி மற்றும் அதிரடி ஆட்டம் மூலம் ஆல்டைம் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
2. கிறிஸ் கெய்ல்
உலகின் நம்பர் 1 அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் களமிறங்கினால் பந்துகள் கூரைக்கு பறப்பது உறுதி. சர்வசாதாரணமாக சிக்சர்களை பறக்கவிடும் கெய்ல், 142 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6 சதம், 31 அரை சதங்களுடன் 4965 ரன்கள் அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 148 ஆக இருப்பது தான் இவரின் சிறப்பம்சமாகும்.
3. விராட் கோலி
கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி ஐபிஎல் தொடக்கம் முதல் ஒரே அணிக்காக (ஆர்சிபி) விளையாடி வருகிறார். தொடர்ந்து ரன்களை குவிக்கும் விராட் கோலி 252 போட்டிகளில் விளையாடி 8 சதம், 55 அரை சதங்களுடன் 8004 ரன்கள் குவித்துள்ளார். உலகின் நம்பர் 1 வீரர் இல்லாமல் ஆல் டைம் பிளேயிங் லெவன் அமைப்பது சாத்தியமில்லாத ஒன்று.
4. சுரேஷ் ரெய்னா
மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கேவில் தோனிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். மிகச்சிறப்பாக ஷாட்களை விளையாடும் ரெய்னா சிஎஸ்கேவுக்காக பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். போட்டிகள்: 205; ரன்கள்: 5528; சராசரி: 32.51; SR: 136.73; ஒரு சதம், 39 அரை சதம்.
5. ஏபி டிவில்லியர்ஸ்
மிஸ்டர் 360 வீரரான ஏபி டிவில்லியர்ஸ்க்கு தெரியாத கிரிக்கெட் ஷாட்களே இல்லை என கூறலாம். கடைசி 5 ஓவரில் 100 ரன் தேவை என்றாலும் இவர் களத்தில் இருந்தால் வெற்றி உறுதி. ஐபிஎல் போட்டிகள்: 184; ரன்கள்: 5162; Hs: 133*; சராசரி: 39.70; SR: 151.68; 3 சதம், 40 அரை சதம்.
6. எம்.எஸ்.தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்)
இந்திய கிரிக்கெட்டின் நாயகன் தோனி, சிஎஸ்கேவை உச்சியில் கொண்டு வைத்ததில் மிகவும் முக்கியமானவர். கூல் கேப்டன் என்றழைக்கப்படும் தோனி அமைதியான, புத்திசாலித்தனமான தலைமையினால் உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறார். போட்டிகள்: 264; ரன்கள்: 5243; மணிநேரம்: 84*; சராசரி: 39.12; 50 அரை சதங்கள்.
7. லசித் மலிங்கா
யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா ஐபிஎல்லில் தவிர்க்க முடியாத ஒரு வீரர். தனது சிறந்த பந்துவீச்சின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பலமுறை கோப்பையை வெல்ல பெரும் பங்கு வகித்தவர். டெத் ஓவர்களில் இவரது பந்துவீச்சை சமாளிப்பது கடினம். போட்டிகள்: 122; Wkts-170; சிறந்தவை: 5/13; சராசரி: 19.80; SR: 16.63; ஒரு முறை 5 விக்கெட் எடுத்துள்ளார்.
IPL New Rules: இனி வைடு பால் சிக்கல் இல்லை! ஐபிஎல்லில் அதிநவீன தொழில்நுட்பம்!
8. ஜஸ்பிரித் பும்ரா
உலகின் நம்பர் 1 பவுலரான ஜஸ்பிரித் பும்ரா, போட்டியின் எந்த நிலையிலும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை அறுவடை செய்வதில் வல்லவர். எந்த ஒரு சிறந்த பேட்டர் என்றாலும் பும்ராவின் பந்துவீச்சை சமாளிப்பது கடினம். மும்பை இந்தியன்ஸ் தூண் பும்ரா என்றால் அது மிகையல்ல. போட்டிகள்: 133; விக்கெட்டுகள்: 165; சிறந்தவை: 5/10; சராசரி: 22.51; சிக்கனம்: 7.30; SR: 18.50; 2 முறை 5 விக்கெட் எடுத்துள்ளார்.
9. புவனேஷ்வர் குமார்
ஐபிஎல்லின் அனுபவ வீரரான புவனேஷ்வர் குமார் வேகம் இல்லாவிட்டாலும் தனது விவேகத்தின் மூலம் சிறப்பாக பந்துவீசி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுப்பவர். பவர் பிளேயில் இவரின் ஸ்விங் பவுலிங்கை சமாளிப்பது மிகவும் கடினம். போட்டிகள்: 176; விக்கெட்டுகள்: 181; சிறந்தது: 5/19; சிக்கனம்: 7.56; 2 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார்.
10.யுஸ்வேந்திர சாஹல்
இந்தியாவின் முன்னணி ஸ்பின் பவுலரான யுஸ்வேந்திர சாஹல் தனது லெக் ஸ்பின் மூலம் எதிரணிகளை முடக்கி போடுவதில் வல்லவர். சுமார் 7 ஆண்டுகள் ஆர்சிபிக்கு முதுகெலும்பாக திகழந்த சாஹல், மிகவும் சிறிய பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட தைரியமாக பந்துவீசி விக்கெட் வேட்டை நடத்தியவர். போட்டிகள்: 160; விக்கெட்டுகள்-205; சிறந்தவை: 5/40; சராசரி: 22.45; ER: 7.84; ஒருமுறை 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
11.ரவீந்திர ஜடேஜா
உலகின் மிகச்சிறந்த ஆல்ரண்டரான ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பவுலிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் எதிரணிக்கு அதிகம் குடைச்சல் கொடுக்கக் கூடியவர். 2008ம் ஆண்டு ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த இவர் இன்றும் சிஎஸ்கேவின் துருப்புச் சீட்டாக இருந்து வருகிறார்.
2023ல் கடைசி ஓவரில் 10 ரன்கள் அடித்து சிஎஸ்கேவுக்கு கோப்பையை வாங்கி கொடுத்தார். போட்டிகள்: 240; ரன்கள்: 2959; மணிநேரம்: 62; சராசரி: 27.40; SR: 129.72; 50s-3; விக்கெட்டுகள்: 160; சிறந்தது: 5/16; ER: 7.62 ஒருமுறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளை எந்த டிவியில் பார்க்கலாம்? ஓடிடியில் இலவசமாக பார்ப்பது எப்படி?