IPL New Rules: இனி வைடு பால் சிக்கல் இல்லை! ஐபிஎல்லில் அதிநவீன தொழில்நுட்பம்!
ஐபிஎல்லில் வைடு பால்களை கணிக்க ஹாக்-ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
ஐபிஎல்லில் வைடு பால்களை கணிக்க ஹாக்-ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
IPL New Rules: Hawk-Eye technology: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை முதல் கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. வரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு விதிகள் கொண்டு வரப்பட உள்ளன. பல்வேறு பவுலர்களின் கோரிக்கையை ஏற்று ஐபிஎல்லில் வீரர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்த பிசிசிஐ அனுமதி அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஐபிஎல்லில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் 2வது புதிய பந்து விதியை அறிமுகப்படுத்த உள்ளது. ஐபிஎல்லில் இரண்டாவது பவுலிங் செய்யும் அணிகள் பனியின் தாக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பனியின் காரணமாக பவுலர்கள் பந்தை கிரிப் செய்ய முடியாததால் அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகிரது. இதனால் ரன்கள் அதிகமாக செல்கிறது. இதை தவிர்க்கும் 2வது இன்னிங்சில் 11வது ஓவருக்கு மேல் புதிய பந்து பயன்படுத்தப்படும்.
இந்நிலையில் ஐபிஎல்லில் ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியேயும் பேட்டர் தலைக்கு மேலேயும் வைடுகளை மதிப்பிடுவதற்கு ஹாக்-ஐ தொழில்நுட்பத்தைப் (Hawk-Eye technology) பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024 இல் இடுப்புக்கு மேல் நோ-பால்களை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பம் இப்போது ஓவர்-தி-ஹெட் வைடுகளுக்கும் செயல்படுத்தப்படும்.
IPL: கோப்பை ஏக்கத்தை தணிக்குமா ஆர்சிபி? பலம், பலவீனம் என்ன? பிளேயிங் லெவன் எப்படி?
ஐபிஎல்லில் தலைக்கு மேல் செல்லும் பந்துகளை வைடு பால் அறிவிப்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. தலைக்கு மேல் செல்லும் பந்துகளை சில நேரங்களில் நடுவர்கள் வைடு என அறிவிப்பதும், சில நேரங்களில் சரியான பந்துதான் என அறிவிப்பதாலும் தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை. இந்த குழப்பத்தை தவிர்ப்பதற்காக தான் ஹாக்-ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஹாக்-ஐ தொழில்நுட்பம் பந்து பாப்பிங் கிரீஸில் பேட்டரைக் கடக்கும்போது அதன் உயரத்தை மதிப்பிடும் மற்றும் அதை பேட்டர் கால் முதல் தலை வரை உயரத்துடன் நேர்மையான நிலையில் ஒப்பிடும். ஒவ்வொரு வீரரின் தலை உயரமும் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படும். ஹாக்-ஐ அமைப்பு பந்துகள் வீசப்படும்போது பேட்டரின் இயக்கத்தின் அளவையும் வழிகாட்டுதலில் தொடர்புடைய மாற்றத்தையும் தானாகவே அளவிடும்.
இதன்மூலம் தலைக்கு மேலே செல்லும் பந்துகள் வைடா? இல்லையா? என்பதை துல்லியமாக கணிக்க முடியும். ஐபிஎல்லின் முதல் போட்டியில் இருந்தே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகளை எந்த டிவியில் பார்க்கலாம்? ஓடிடியில் இலவசமாக பார்ப்பது எப்படி?