IPL Live Streaming and where to watch: உலகின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2025 தொடர் நாளை (மார்ச் 22ம் தேதி) முதல் கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது. நாளை தொடங்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்கு மறுநாள் மார்ச் 23ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
IPL 2025: Live Streaming
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 10 அணிகள் மோதுகின்றன. மொத்தம் 78 லீக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. மே 25ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2025 தொடங்கும் நேரம் என்ன?
ஐபிஎல்லில் 18வது சீசன் மார்ச் 22 அன்று தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் முதல் போட்டியில் ஆர்சிபி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஐபிஎல்லில் மாலை நேர ஆட்டங்கள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பிற்பகல் ஆட்டங்கள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
IPL: கோப்பை ஏக்கத்தை தணிக்குமா ஆர்சிபி? பலம், பலவீனம் என்ன? பிளேயிங் லெவன் எப்படி?
IPL 2025: Where to Watch
ஐபிஎல் 2025 டாஸ் போடும் நேரம் என்ன?
ஐபிஎல்லில் பிற்பகல் போட்டிகளுக்கான டாஸ் இந்திய நேரப்படி மாலை 3.00 மணிக்கும், மாலை நேர ஆட்டங்களுக்கான டாஸ் இந்திய நேரப்படி மாலை 7.00 மணிக்கும் போடப்படும்.
ஐபிஎல் போட்டிகளை எந்த டிவியில் பார்க்கலாம்?
ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 ஆகிய சேனல்களில் தமிழ் வர்ணனையுடன் போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.
ஐபிஎல் போட்டிகளை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்து மகிழலாம்.
IPL 2025
ஐபிஎல் போட்டிகளை ஓடிடியில் இலவசமாக பார்க்கலாமா?
ஜியோஹாட்ஸ்டாரில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க பல்வேறு பேக்கேஜ்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஏர்டெல், ஜியோ, வோடோபோன் ஐடியா ஆகிய செல்போன் நிறுவனங்கள் ரீசார்ஜுடன் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் கொண்டுள்ளன. இதன்மூலம் ரீசார்ஜ் செய்யும்போது நீங்கள் குறைந்த கட்டணத்தில் ஐபிஎல் போட்டிகளை பார்த்து ரசிக்க முடியும்.
ஐபிஎல் போட்டிகள் எந்தெந்த நகரங்களில் நடைபெறுகிறது?
ஐபிஎல் போட்டிகள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டணம், அகமதாபாத், கவுகாத்தி, மும்பை, மொகாலி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ, டெல்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய நகரங்களில் நடக்கிறது.
ஐபிஎல்லில் 2 புதிய விதிகள் வருகிறது! பவுலர்களுக்கு இனி கொண்டாட்டம்! என்ன ரூல்ஸ்?