சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு! வாரி வழங்கும் பிசிசிஐ!

Published : Mar 20, 2025, 12:32 PM IST

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.  

PREV
14
சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு! வாரி வழங்கும் பிசிசிஐ!

Champions Trophy Prize Money: மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி மீண்டும் ஒருமுறை கோப்பையை கையில் ஏந்தியுள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்திய வீரர்கள் கோப்பையை தட்டித்தூக்கினார்கள். 

24
champions trophy 2025

இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். மேலும் பிரதமர் மோடி முதல் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, ''சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த பரிசுதொகை வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அணியின் ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

IPL: மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?

34
BCCI Indian Cricket Team

''தொடர்ச்சியாக ஐசிசி பட்டங்களை வெல்வது சிறப்பு வாய்ந்தது, மேலும் இந்த பரிசுத் தொகை உலக அரங்கில் இந்திய அணியின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பை அங்கீகரிக்கிறது. இந்த ரொக்க விருது, திரைக்குப் பின்னால் அனைவரும் செய்யும் கடின உழைப்புக்கான அங்கீகாரமாகும். ஐசிசி யு19 மகளிர் உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் இது நமக்கு கிடைத்த இரண்டாவது ஐசிசி கோப்பையாகும், மேலும் இது நமது நாட்டில் நடைமுறையில் உள்ள வலுவான கிரிக்கெட் சூழலை எடுத்துக்காட்டுகிறது'' என்று ரோஜர் பின்னி கூறியுள்ளார். 

44
BCCI Prize Money

இது தொடர்பாக பிசிசிஐயின் கௌரவச் செயலாளர் தேவஜித் சைகியா, கூறுகையில், ''இந்த தகுதியான வெகுமதியை வீராங்கனைகள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வழங்குவதில் பிசிசிஐ பெருமை கொள்கிறது. பல வருட கடின உழைப்பு மற்றும் மூலோபாய செயல்படுத்தலின் விளைவாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வெற்றி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் முதலிடத்தை நியாயப்படுத்தியுள்ளது, மேலும் வரும் ஆண்டுகளில் இந்திய அணி தொடர்ந்து சிறந்து விளங்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்திய வீரர்கள் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்பு உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளது'' என்றார்.

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.19.5 கோடி) பரிசுத்தொகை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL: CSK vs MI போட்டியில் ஹர்திக் பாண்ட்யா விளையாட தடை விதிக்கப்பட்டது ஏன்?

Read more Photos on
click me!

Recommended Stories