மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் அஜய் ஜடேஜாவுக்கு கிரிக்கெட் விளையாட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 2001ல் இந்த தடையை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேட்ச் பிக்சிங் விவகாரத்தால் கிரிக்கெட்டிலிருந்து விலகிய ஜடேஜா Khel, Pal Pal Dil Ke Ssat ஆகிய படங்களில் நடித்தார். மேலும் கிரிக்கட் வண்ணனையிலும், சில அணிகளின் பயிற்சியாளராகவும் அஜய் ஜடேஜா இருந்து வருகிறார்.
அஜய் ஜடேஜா 1992 முதல் 2000 வரை இந்தியாவுக்காக 196 ஒருநாள் மற்றும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 6 சதங்களுடன் 5359 ரன்களும், டெஸ்ட்டில் 576 ரன்களும் அடித்துள்ளார். ஜடேஜாவின் தாய் கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்தவர். தந்தை தௌலட்சின்ஜி ஜடேஜா, குஜராத்தின் ஜாம் நகர் மக்களவைத் தொகுதியில் மூன்று முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜடேஜாவின் மனைவி அதிதி ஜெட்லியும் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் தான். உலகின் பணக்கார கிரிக்கெட் வீரரான ஜடேஜா ஜாம்நகரின் அரச சிம்மாசனத்தின் வாரிசாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
60 கோடி இல்ல, தனஸ்ரீக்கு ஜீவனாம்சம் - யுஸ்வேந்திர சாஹல் எவ்வளவு கொடுக்கணும்?