ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டனான ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். மேலும் 2009 ஆம் ஆண்டில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவும் கேப்டனாக இருந்து கோப்பையை வென்றார். சிறந்த பேட்ஸ்மேனான ரோஹித், ஒரு சதம் மற்றும் 41 அரைசதங்கள் உட்பட 6,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார், அதிகபட்சமாக 109 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஃபீல்டிங்கும் சிறப்பாக இருந்துள்ளது. 98 கேட்சுகளுடன், பந்துவீச்சின் மூலம் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கேப்டன்சி சாதனைகளைப் பொறுத்தவரை, இந்த இரண்டு ஜாம்பவான்களும் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். தோனி 221 ஐபிஎல் போட்டிகளில் தலைமை தாங்கி 129 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். வெற்றி சதவீதம் 58.90% ஆகும். தோனியின் புத்திசாலித்தனமான கூலான தலைமைப்பண்பு அவருக்கு வெற்றிகளை அறுவடை செய்துள்ளது. மறுபுறம், ரோஹித் 152 போட்டிகளில் மும்பை அணிக்கு தலைமை தாங்கினார், 55.92% என்ற வெற்றி சதவீதத்துடன் 83 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளர்.