IPL: CSK vs MI போட்டியில் ஹர்திக் பாண்ட்யா விளையாட தடை விதிக்கப்பட்டது ஏன்?

Published : Mar 20, 2025, 09:41 AM ISTUpdated : Mar 20, 2025, 11:31 AM IST

ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அது ஏன்? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
IPL: CSK vs MI போட்டியில் ஹர்திக் பாண்ட்யா விளையாட தடை விதிக்கப்பட்டது ஏன்?

IPL: Why Hardik Pandya banned from playing CSK vs MI match: உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ளது. . மார்ச் 22 அன்று தொடங்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்கு மறுநாள் மார்ச் 23ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 

24
CSK vs MI match

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரசிகர்கள் பலம் கொண்ட இரு அணிகள் மோதுவது பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் 2024 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதற்காக ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ரூ.1,450 கோடி சொத்து! மாதுரி தீட்சித் உடன் கிசுகிசுக்கப்பட்ட ராஜ பரம்பரை கிரிக்கெட் வீரர்!

34
Hardik Pandya

''2024 மே 17 அன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியின் போது தனது அணி மெதுவான ஓவர் விகிதத்தை பராமரித்ததால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்டிக் பாண்ட்யாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஓவர் விகிதக் குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ், இந்த சீசனில் மும்பை அணி மூன்றாவது முறையாக மெதுவாக பந்து வீசியதால் பாண்ட்யாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர் அடுத்த ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்று ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

44
Suryakumar Yadav

இதன் காரணமாக 2025 ஐபிஎல் சீசனின் சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவால் விளையாட முடியாது. இதனால் அந்த ஒரு போட்டிக்கு மட்டும் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஹர்திக் பாண்ட்யா விளையாடாததால் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மும்பை கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் சூர்யகுமார் யாதவ்வை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.

சூர்யகுமார் யாதவ்வை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாக உள்ளார். அவர் வெற்றிகரமான கேப்டனாக வலம் வருவதால் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கேப்டனாகியுள்ளார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு பிறகு சூர்யகுமார் மும்பை அணியின் நிரந்தர கேப்டனாக ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

தோனி vs ரோகித் சர்மா! ஐபிஎல் 'டான்' யார்? கேப்டன்சியில் அதிக வெற்றிகளை குவித்தது யார்?

Read more Photos on
click me!

Recommended Stories