இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. குருணால் பாண்டியா விளையாடும் ஆர்சிபி அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியையும், ஆர்சிபி அணி டெல்லி அணியையும் எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
மழையால் மாறி போன போட்டி – 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி!