Rinku Singh IPL 2025 Kolkata Knight Riders : ஐபிஎல் 300 ரன்களையும் எளிதில் கடக்க கூடிய நிலைக்கு வளர்ந்துவிட்டது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்டார் பிளேயர் ரிங்கு சிங் கூறியுள்ளார்.
Rinku Singh IPL 2025 Kolkata Knight Riders : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (12 புள்ளிகள்), டெல்லி கேபிடல்ஸ் (12 புள்ளிகள்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (12 புள்ளிகள்), மும்பை இந்தியன்ஸ் (10 புள்ளிகள்) ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதே போன்று பஞ்சாப் கிங்ஸ் (10 புள்ளிகள்), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (10 புள்ளிகள்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (6 புள்ளிகள்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (6 புள்ளிகள்) பெற்று புள்ளிப்பட்டியலில் 5 முதல் 8 இடங்கள் வரை பிடித்துள்ளன.
28
KKR
ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடிய 9 போட்டிகளில் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9 மற்றும் 10ஆவது இடங்களை பிடித்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் எஞ்சிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட 14 புள்ளிகள் மட்டுமே பெறும்.
38
பிளே ஆஃப் சுற்றுக்கு 14 புள்ளிகளே போதுமானதாக இருந்தாலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி எத்தனை புள்ளிகள் பெறுகிறதோ அதை வைத்து மற்ற அணிகளின் புள்ளிப்பட்டியல் இருக்கும். இதுவே ஒன்றுக்கும் அதிகமான அணிகள் ஒரே மாதிரியான புள்ளிப்பட்டியலில் பெற்றிருந்தால் நெட் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணிகளின் புள்ளிப்பட்டியல் இடம் பெறும்.
48
Rinku Singh (Photo: IPL)
நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இந்த தொடரில் கேகேஆர் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ரிங்கு சிங் பெரியளவில் ஸ்கோர் எடுக்கவில்லை. இந்தநிலையில் தான் இன்றைய போட்டிகு முன்னதாக JioHotstar-க்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில், தனது பினிஷர் பங்கு மற்றும் உடல் நலம், அமைதி பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
58
நான் பொதுவாக 5 அல்லது 6ஆவது இடத்தில் தான் பேட் செய்கிறேன். யுபி மற்றும் ஐபிஎல் தொடரிலும் நான் இதையே செய்துள்ளேன். இது தான் என்னுடைய பழக்கம். 14 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடுவதற்கு உடலை நன்றாக பராமரிக்க வேண்டும். அதில் நான் கவனம் செலுத்துகிறேன். நான் தோனியுடன் அடிக்கடி பேசுவேன். அவர் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் என்பார். மேலும், போட்டியின் தன்மைக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்று வலியுறுத்துவார்.
68
IPL 2025: Punjab Kings vs Kolkata Knight Riders
அமைதியாக இருந்தாலே எல்லாமே சரியாகிவிடும். ஐஎபிஎல் தொடரில் விளையாட தொடங்கியதிலிருந்து நான் தொடர்ந்து கற்றுக் கொண்டு வருகிறேன். ஏனென்றால் ஆண்ட்ரே ரசல் எப்படி விளையாடுகிறார் என்பதை நான் அவருடன் விளையாடும் போது நான் உற்று நோக்குகிறேன். அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்கிறேன். ஐபிஎல் தொடரானது இப்போது 300 ரன்களை கடக்கும் நிலைக்கு வளர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் 262 ரன்களை சேஸ் செய்தது.
78
கடந்த சீசனில் 287/3 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த சீசனில் 286/6 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் எல்லா அணிகளுமே பலம் வாய்ந்த அணியாகவே உள்ளன. எந்த அணியாலுமே 300 ரன்களைக் கூட எளிதாக அடிக்க முடியும் என்று ரிங்கு சிங் கூறியிருக்கிறார்.
88
Image Credit: Getty Images
தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தற்போது வரையில் பஞ்சாப் கிங்ஸ் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் குவித்துள்ளது.