முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. எஸ்.கே. ரஷீத் கோல்டன் டக்காக வெளியேறினார். முகமது ஷமி முதல் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, சாம் கர்ரனும் அதே பாதையில் சென்றார். 17 வயது ஆயுஷ் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். டெவால்ட் பிரெவிஸ் அறிமுக போட்டியில் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி 154 ரன்கள் எடுத்தது. ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனத்கட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.