இந்திய இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்து வருவதாக பல ஆண்டுகாளாக கூறப்படும் நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Shubman Gill Explains Sara Tendulkar Dating Rumours: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகளான சாரா டெண்டுல்கரும் டேட்டிங் செய்து வருவதாக பல ஆண்டுகளாக தகவலகள் தகவல்கள் பரவி வருகின்றன. இருவரும் சேர்ந்து வலம் வருவதாக நெட்டிசன்கள் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர். ஆனால் இந்த வதந்திகள் குறித்து சுப்மன் கில்லும், சாரா டெண்டுல்கரும் விளக்கம் அளிக்காமல் மவுனம் சாதித்து வந்தனர்.
இந்நிலையில், சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்து வருவதாக வந்த வதந்திகள் குறித்து சுப்மன் கில் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக தான் தனிமையில் இருப்பதாகவும், தன்னைப் பற்றி வரும் வதந்திகளைப் பொருட்படுத்துவதில்லை என்றும், அவை உண்மையல்ல என்பது தனக்குத் தெரியும் என்றும் சுப்மன் கில் கூறியுள்ளார். ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
24
Shubman Gill - Sara Tendulkar
கடந்த சில ஆண்டுகளாக சாரா டெண்டுல்கருடன் சுப்மன் கில் காதலித்து வருவதாகவும், இருவரும் ஒன்றாகச் சுற்றி வருவதாகவும் செய்திகள் பரவின. மேலும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இருவருக்கும் தொடர்புடைய போலி புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், இவர்களுக்குள் ஏதோ இருக்கிறது என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்தது. மறுபுறம், பாலிவுட் நடிகை சாரா அலிகானுடனும் சுப்மன் கில் உறவில் இருப்பதாக மற்றொரு செய்தி பரவியது.
இந்த வதந்திகள் அனைத்திற்கும் ஒரே நேரத்தில் விளக்கமளித்துள்ளார் சுப்மன் கில். ''நான் மூன்று ஆண்டுகளாகத் தனிமையில் இருக்கிறேன். பலருடன் என்னைத் தொடர்புபடுத்தி செய்திகள் வருகின்றன. எனக்குத் தெரியாத நபர்கள், நான் ஒருபோதும் சந்திக்காத நபர்களுடன் என்னைத் தொடர்புபடுத்தி வதந்திகளைப் பரப்புகிறார்கள். ஆனால் இதெல்லாம் உண்மையல்ல, நான் யாருடனும் உறவில் இல்லை. நான் மிகவும் தொழில்முறை சார்ந்தவன். எனக்கு கிரிக்கெட் தான் உலகம், அதனால் உறவில் இருக்கும் அளவுக்கு எனக்கு நேரம் கிடைப்பதில்லை'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
44
Shubman Gill, Cricket
தொடர்ந்து பேசிய சுப்மன் கில், ''கிட்டத்தட்ட 300 நாட்களாக ஓய்வில்லாமல் கிரிக்கெட் பயணம் செய்து வருகிறேன். டேட்டிங் செய்ய எனக்கு எங்கே நேரம் இருக்கிறது? வதந்திகள் என்பது தானியங்கி சுவிட்ச் போன்றவை. அவை எப்போது யார் மீது பாயும் என்று சொல்வது கடினம்'' என்றார். சுப்மன் கில்லுடன் சாரா டெண்டுல்கர், சாரா அலிகான் ஆகியோரைத் தொடர்புபடுத்தி மைதானத்திலும் ரசிகர்கள் கோஷமிடுவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த விஷயத்தில் சக கிரிக்கெட் வீரர்களும் கில்லைக் கிண்டல் செய்வார்களாம். சாரா டெண்டுல்கர் மட்டுமின்றி சாரா அலிகான், ரிதிமா பாண்டிட், அவனீத் கவுர் போன்ற நடிகைகளுடனும் சுப்மன் கில் டேட்டிங் செய்வதாக தகவல்கள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.