மனைவி தனஸ்ரீயை விவாகரத்து செய்ய முடிவா? மவுனம் கலைத்த சஹல்; உருக்கமான பதிவு!

First Published | Jan 10, 2025, 1:29 PM IST

மனைவி தனஸ்ரீயை சஹல் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து சஹல் மனம்திறந்து பேசியுள்ளார்.

Yuzvendra Chahal and Dhanashree Verma

சஹல்-தனஸ்ரீ வர்மா 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சஹல். இவரது மனைவி பிரபல நடனக் கலைஞர் தனஸ்ரீ வர்மா. சஹல்-தனஸ்ரீ உறவில் விரிசல் ஏற்படுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒருவரையொருவர் அன்பாலோ செய்ததால் இருவரும் பிரிய உள்ளதாக கருத்துகள் பரவி வந்தன. 

தனஸ்ரீ வர்மா நல்ல நடனக் கலைஞரும், நடன அமைப்பாளரும் ஆவார். இவர் பிரபல பல் மருத்துவராகவும் உள்ளார். அவர் கணவர் யுஸ்வேந்திர சஹலுடன் அதிக நேரம் செலவழிப்பதில்லை எனவும் நண்பர்களுடன் நீண்ட நேரம் செலவழிப்பதால் இருவருக்கும் இடையே உரசல் உண்டானது எனவும் தகவல்கள் வேகமாக பரவி வந்தன. 

Divorce Rumours

மவுனம் கலைத்த சஹல்

இந்த விவகாரம் தொடர்பாக ஏதும் பேசமால் மவுனம் காத்து வந்த யுஸ்வேந்திர சஹல் ஒருவழியாக மவுனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ''எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் அசைக்க முடியாத அன்பும் ஆதரவும் இல்லாமல், நான் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.

ஆனால் இந்தப் பயணம் இன்னும் முடிவடையவில்லை. எனது நாட்டிற்கும், எனது அணிக்கும், எனது ரசிகர்களுக்கும் இன்னும் பல நம்பமுடியாத வெற்றிகளை கொடுக்க வேண்டியதுள்ளது. ஒரு விளையாட்டு வீரராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். அதே நேரத்தில் நான் ஒரு மகன், ஒரு சகோதரன் மற்றும் ஒரு நண்பனாக இருக்கிறேன். 

'இந்தி தேசிய மொழி கிடையாது'; அழுத்தம் திருத்தமாக சொன்ன அஸ்வின்; பாஜக கடும் எதிர்ப்பு!

Tap to resize

Chahal Speech About Rumours

வேண்டுகோள் விடுத்தார் 

சமீபகாலமாக எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் குறித்து நான் புரிந்து வைத்துள்ளேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில விஷயங்கள் உண்மையாக இருக்கலாம்; பொய்யாக இருக்கலாம் என ஊடகங்கள் ஊகித்து வருவதை கவனித்து வருகிறேன். ஒரு மகனாக, ஒரு சகோதரனாக, ஒரு நண்பராக, இந்த ஊகங்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Dhanashree Verma

அனுதாபம் வேண்டாம் 

ஏனெனில் அவை எனக்கும் என் குடும்பத்திற்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளன. எனது குடும்பம் எப்போதும் அனைவருக்கும் நலம் விரும்புவதையும், குறுக்குவழிகளை எடுப்பதற்குப் பதிலாக அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் வெற்றியை அடைய பாடுபடுவதையும் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. இவற்றில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். நான் எப்போதும் உங்கள் அன்பையும் ஆதரவையும் தேட முயற்சிப்பேன்; அனுதாபத்தை அல்ல'' என்று சஹல் தெரிவித்துள்ளார்.

கோ கோ உலகக் கோப்பை 2025: பிரதீக் வைக்கர், பிரியங்கா இங்கிள் தலைமையில் இந்திய அணிகள் அறிவிப்பு

Latest Videos

click me!