உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்
இதே கருத்தை வலியுறுத்திய இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ''இந்திய அணியின் மூத்த வீரர்கள் கண்டிப்பாக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அப்படி விளையாடினால் தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் எளிதாக ரன்கள் உதவியாக இருக்கும். மூத்த வீரர்கள் கண்டிப்பாக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொல்ல வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சிட்னி டெஸ்ட்டில் தோல்விக்கு பிறகு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் ரஞ்சி கோப்பை போன்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவார்களா? என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கம்பீர், ''எல்லோரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன்.