சிட்னி டெஸ்ட்டில் படுதோல்வி; WTC பைனல் வாய்ப்பை இழந்தது இந்தியா; தோல்விக்கு காரணம் என்ன?

First Published | Jan 5, 2025, 10:28 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்தியா WTC பைனலுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

India vs Australia Test

இந்தியா ஆஸ்திரேலியா 5வது டெஸ்ட் 

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 181 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். 

பின்பு 4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 141 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் பரிதவித்தது. ரவீந்திர ஜடேஜா (8 ரன்), வாஷிங்டன் சுந்தர் (6) களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடந்தது. ஆனால் மேற்கொண்டு வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து 157 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட் ஆனது.

India Lost in Sydney Test

இந்திய அணி ஆல் அவுட் 

ஜடேஜா (13 ரன்), வாஷிங்டன் சுந்தர் (12 ரன்), சிராஜ் (4), பும்ரா (0) என வரிசையாக ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்காட் போலண்ட் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இதனால் ஆஸ்திரேலிய் அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உலகின் நம்பர் 1 பவுலர் பும்ரா காயம் காரணமாக பந்துவீச முடியாததால் அவர் இல்லாமல் இந்திய பவுலர்கள் பவுலிங் செய்ய களமிறங்கினார்கள்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி இந்த இலக்கை எட்ட முடிவு செய்தனர். அதன்படி தொடக்கம் முதல் அதிரடியாக ஆடிய சாம் காண்ஸ்டாஸ் 23 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்தில் கேட்ச் ஆனார். தொடர்ந்து லபுஸ்சேன் (6) ஸ்டீவ் ஸ்மித் (4) என அடுத்தடுத்து அவுட் ஆனதால் ஆஸ்திரேலியா 58/3 என நெருக்கடியில் சிக்கியது.

ஆனால் உஸ்மான் கவாஜா (41) சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.  கடைசியில் டிராவிஸ் ஹெட் (34 ரன்), புதுமுக வீரர் வெப்ஸ்டர் (39 ரன்) அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.

பாக்கெட்டில் கை விட்டு ஸ்மித்தை கலாய்த்த விராட் கோலி; அப்படியே அமைதியான ஆஸி. ரசிகர்கள்!

Tap to resize

Rohit sharma

WTC பைனல் வாய்ப்பை இழந்த இந்தியா

இதனால் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடரை 3 1 எனற கணக்கில் கைப்பற்றி 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கும் ஆஸ்திரேலியா செல்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதே வேளையில் சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 3 0 என படுதோல்வி அடைந்த இந்திய அணி, இந்த தொடரிலும் 3 1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான வாய்ப்பு முற்றிலுமாக பறிபோகியுள்ளது. கடந்த 2019 21 மற்றும் 2021 23 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு சென்று தோல்வியை தழுவிய இந்திய அணி, இந்த முறை முதன்முறையாக பைனலுக்கு செல்ல முடியாமல் வெளியேறியுள்ளது.

Virat Kohli Batting

படுதோல்விகளுக்கு காரணம் என்ன?

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைய முதன்மையான மற்றும் முக்கியமான காரணம் பேட்ஸ்மேன்கள் தான். அணியை முன்னெடுத்து செல்ல வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா 6 சரசாரியுடன் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன்சியிலும் சொதப்பினார். முதல் டெஸ்ட்டில் சதம் அடித்த விராட் கோலி, அதன்பிறகு ஒரு அரைசதம் கூட அடிக்காமல் அவுட் சைடு ஆப் ஸ்டெம்புக்கு விக்கெட்டுகளை தாரைவார்த்து செல்வதை வழக்கமாக்கினார்.

இதேபோல் சுப்மன் கில், பெரிதும் எதிர்பார்த்த ரிஷப் பண்ட் சரியாக பேட்டிங் செய்யவில்லை. கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், ஜடேஜா ஆகியோர் ஓரளவு விளையாடினாலும் அணிக்கு தேவையான பங்களிப்பு செய்யவில்லை. அதே வேளையில் இளம் வீரர்கள் நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் நன்றாக விளையாடினார்கள்.

மறுபக்கம் பும்ரா இந்த தொடரில் 32 விக்கெட்டுகளை சாய்த்து கம்பீரமாக நிற்க, அவருக்கு மற்ற பாஸ்ட் பவுலர்கள் ஆதரவு இல்லை. சிராஜ், ஹர்சித் ராணா, ஆகாஷ் தீப் என மற்ற பவுலர்கள் எதிர்பாரத்த அளவு செயல்படாததும் அணியின் தோல்விக்கு காரணமாகி விட்டது.

ரோகித் சர்மாவுக்கு அடுத்த ஷாக்; சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டனாகும் ஹர்திக் பாண்ட்யா? பரபரப்பு தகவல்!

Latest Videos

click me!