Jasprit Bumrah Injury
இந்திய அணி தடுமாற்றம்
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல் சொதப்பினார்கள். பின்பு முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்களில் சுருண்டது.
அந்த அணியின் அறிமுக வீரர் வெப்ஸ்டர் (57) தனது முதல் அரைசதத்தை விளாசினார். இந்திய அணியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். பும்ரா, நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்பு 4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 141 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது.
Jasprit Bumrah Bowling
நாளை என்ன நடக்கும்?
தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (22 ரன்), கே.எல்.ராகுல் (13 ரன்) விரைவில் வெளியேறினார்கள். விராட் கோலி வெறும் 6 ரன்னில் போலண்ட் வீசிய வழக்கமான அவுட் சைடு ஆப் ஸ்டெம்ப் பந்தை தேவையில்லாமல் அடித்து ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சுப்பன் கில் (13 ரன்) தவறான ஷாட்டில் வீழ்ந்தார். ஒருகட்டத்தில் இந்தியா 78/4 என்ற நிலையில் இருந்தபோது மைதானத்தில் சரவெடிபோல் வெடித்த ரிஷப் பண்ட் 33 பந்தில் 61 ரன்கள் அடித்து இந்திய அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டார். அவர் 6 பவுண்டரி 4 சிக்சர்கள் விளாசினார்.
2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 141/6 என பரிதவிக்கும் நிலையில் ஜடேஜா (8 ரன்), வாஷிங்டன் சுந்தர் (6) களத்தில் உள்ளனர். இந்திய அணி 145 ரன்கள் முன்னிலையில் உள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு கடினமான இந்த பிட்ச்சில் ரன்கள் அடிப்பது சிரமம் என்பதால் 220 முதல் 250 ரன்கள் வரை இலக்கு நிர்ணயித்தால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
இன்னும் 4 விக்கெட்டுகளே கையில் இருப்பதால் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் முதல் செஷனை சமாளித்தால் இன்னும் 60 முதல் 80 ரன்கள் வரை எடுக்க முடியும்.
மனைவியை பிரியும் யுஸ்வேந்திரா சாஹல்? இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்ததால் சர்ச்சை!
India vs Australia Test
பும்ரா பந்துவீசுவாரா?
ஒருவேளை இந்திய அணி சீக்கிரம் ஆல்அவுட்டாகி 180 ரன்கள் முதல் 200 ரன்கள் வரை ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு நிர்ணயித்தால் இந்திய அணி வெற்றி பெறுவது ஜஸ்பிரித் பும்ராவின் கைகளில் உள்ளது. ஆனால் பும்ரா நாளை பந்துவீசுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் பும்ரா இன்று உணவு இடைவேளைக்கு பிறகு முதுகு பகுதியில் காயத்தால் அவதிப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்து அவசரம் அவசரமாக வெளியேறிய அவர் அணியின் மருத்துவ ஊழியர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. ஸ்கேன் பரிசோதனையில் காயத்தின் தன்மை பெரிய அளவில் இல்லை என தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பும்ரா நாளை பேட்டிங் செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. அதே வேளையில் நாளை அவர் பந்துவீசுவது சந்தேகம் என தகவல்கள் கூறுகின்றன.
Mohammed Siraj Bowling
நம்பிக்கை கொடுக்கும் சிராஜ்
பந்துவீசும் அளவுக்கு தனது உடல்நிலை சரியாக இருக்கிறது? என்று நாளை பும்ரா உணர்ந்தால் மட்டுமே அவர் பந்துவீச அனுமதிக்கப்படுவார் இல்லை என்றால் பந்துவீச மாட்டார் என தகவல்கள் உலா வருகின்றன. அப்படி ஒருவேளை அவர் பந்துவீச முடியாமல் போனால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகும்.
ஆனால் முதல் இன்னிங்சில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை கொடுத்து இருப்பதால் பும்ரா இல்லாவிட்டாலும் இவர்களால் அணிக்கு வெற்றியை தேடி தர முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிட்னி டெஸ்டில் கெத்து காட்டிய ரிஷப் பண்ட்: சிக்ஸர், பவுண்டரி மழையால் பயந்து நடுங்கிய ஆஸி பவுலர்ஸ்!