கேப்டன்சியில் ரோகித்தின் பலவீனம்
அதாவது அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவை ஓரம்கட்டி விட்டு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அணி இக்கட்டான நிலையில் இருந்த நேரத்தில் ரோகித் சர்மா நெருக்கடியை சமாளிக்க முடியாமல் கடும் அழுத்தத்தில் வீழ்ந்தார்.
பீல்டிங் செட் செய்வதிலும், பவுலர்களுக்கு ஓவர்கள் ரொட்டேட் செய்வதிலும் தடுமாறினார். சாம்பியன்ஸ் டிராபியிலும் இதே நிலை தொடர்ந்தால் இந்த அணி கோப்பையை மறந்து விட வேண்டியதுதான் என பிசிசிஐ நினைக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட், ஓடிஐ கிரிக்கெட் வேறு வேறு பார்மட் என்றாலும் கேப்டன்சி செய்யும் விதம் ஒன்றுதான் என பிசிசிஐ கருதுகிறது. இதனால் கேப்டன்சியில் பலவீனாக உள்ள ரோகித் சர்மாவை கழட்டி விட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.