Jasprit Bumrah Bowling
2024 ஐசிசியின் சிறந்த வீரர்கள் யார்?
உலகின் நம்பர் 1 பவுலரான ஜஸ்பிரித் பும்ரா, 2024 ஐசிசியின் சிறந்த வீரர்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்த்து இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோரும் பட்டியலில் உள்ளனர். 2024 பும்ராவுக்கு மகத்தான ஆண்டாக அமைந்துள்ளது.
2024ம் ஆண்டு பும்ரா 80 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 10 கேட்ச்களை பிடித்துள்ளார். ஹாரி ப்ரூக் 2024ம் ஆண்டு 1575 ரன்கள் அடித்துள்ளார். 27 கேட்ச்கள் கொடுத்துள்ளார். டிராவிஸ் ஹெட் 2024ம் ஆண்டு 1398 ரன்கள் அடித்துள்ளார். 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 11 கேட்ச்களை பிடித்துள்ளார். ஜோ ரூட் 2024ல் 1556 ரன்கள் அடித்துள்ளார். 24 கேட்ச்கள் பிடித்துள்ளார். 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
2024 Best Cricket Players
ஸ்மிருந்தி மந்தனா, அர்ஸ்தீப் சிங்
இது மட்டுமின்றி 2024ல் சிறந்த டெஸ்ட் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலிலும் பும்ரா இடம்பெற்றுள்ளார். பும்ராவுடன் ஹாரி ப்ரூக், ஜோ ரூட், இலங்கையின் குசல் மெண்டிஸ் ஆகியோரும் இருக்கின்றனர். பும்ரா 2024ல் டெஸ்ட் போட்டிகளில் 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பும்ராவை தவிர இந்திய வீரர் அர்ஸ்தீப் சிங் 2024ல் சிறந்த டி20 வீரர்களின் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவருடன் டிராவிஸ் ஹெட், பாகிஸ்தானின் பாபர் அசாம், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோரும் ரேஸில் உள்ளனர்.இது தவிர 2024 ஐசிசியின் ஓடிஐ சிறந்த வீராங்கனைகள் பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருந்தி மந்தனா இடம் பெற்றுள்ளார். 2024ல் வளர்ந்து வரும் வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் ஷ்ரேயங்கா பாட்டீல் இடம் பிடித்துள்ளார்.
'மனதளவில் உடைந்து விட்டேன்'; தோல்விக்கு பிறகு உருக்கமாக பேசிய ரோகித் சர்மா; முழு விவரம்!
Travis Head Batting
முடிவு எப்போது?
ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் சேர்த்து மொத்தம் 9 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 வீரர், வீராங்கனைகள் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ரசிகர்கள் ஐசிசியின் இணையதளத்துக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான வீரர், வீராங்கனைகளுக்கு வாக்களிக்கலாம். இந்த வாக்குப்பதிவின் அடிப்படையில் இன்னும் 11 நாள் கழித்து ஐசிசி சிறந்த வீரர்களை அறிவித்து விருதுகளை வழங்கும்.
ஐசிசி 2024ம் ஆண்டுக்கான 9 பிரிவுகளின் பரிந்துரை பட்டியல் முழு விவரம்:
2024ல் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது பரிந்துரை பட்டியல்: பும்ரா, ஹாரி ப்ரூக், டிராவிஸ் ஹெட், ஜோ ரூட்.
சிறந்த கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியல்: சமார அட்டப்பட்டு (இலங்கை), அமெலியா கெர் (நியூசிலாந்து), அனாபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா), லாரா வோல்வார்ட் (தென்னாப்பிரிக்கா)
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியல்: பும்ரா, ஹாரி ப்ரூக், கமிந்து மெண்டிஸ், ஜோ ரூட்.
Smriti Mandhana
சிறந்த ஓடிஐ கிரிக்கெட் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியல்: வனிந்து ஹசரங்கா (இலங்கை), குசல் மெண்டிஸ் (இலங்கை), அஸ்மத்துல்லா ஒமர்சாய் (ஆப்கானிஸ்தான்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (வெஸ்ட் இண்டீஸ்)
சிறந்த ஓடிஐ கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியல்: சமார அட்டப்பட்டு (இலங்கை), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), அமெலியா கெர் (நியூசிலாந்து), லாரா வோல்வார்ட் (தென்னாப்பிரிக்கா)
வளர்ந்து வரும் வீரர்களுக்கான பட்டியல்: கஸ் அட்கின்சன் (இங்கிலாந்து), சைம் அயூப் (பாகிஸ்தான்), ஷமர் ஜோசப் (வெஸ்ட் இண்டீஸ்), கமிந்து மெண்டிஸ் (இலங்கை)
வளர்ந்து வரும் வீராங்கனைகளுக்கான பட்டியல்: அன்னரி டெர்க்சன் (தென்னாப்பிரிக்கா), சாஸ்கியா ஹார்லி (ஸ்காட்லாந்து), ஷ்ரேயங்கா பாட்டீல் (இந்தியா), ஃப்ரீயா சார்ஜென்ட் (அயர்லாந்து)
ரோகித், கோலி மோசமான பேட்டிங்; பண்ட்டின் தவறான ஷாட்; 4வது டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வி!