நிதிஷ் குமார் ரெட்டி சூப்பர் இன்னிங்ஸ்
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்தியா 221/6 என தடுமாறிய நிலையில் 8வது இடத்தில் களமிறங்கிய 21 வயதான இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலிய பாஸ்ட் பவுலர்களின் பந்துகளை விளாசித் தள்ளி அதிரடி சதம் விளாசி அணியை மீட்டார்.
தனது முதல் டெஸ்ட் தொடரிலேயே சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி இப்போது உலகம் முழுவதும் பேசப்படும் நபராக மாறி விட்டார். இதனால் 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைவரும் உற்று நோக்கும் வீரராக நிதிஷ் குமார் ரெட்டி கண்டிப்பாக இருப்பார். ஆனால் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் நிதிஷ் குமார் ரெட்டி, தென்னாபிரிக்க அதிரடி வீரரால் பல கோடி ரூபாயை இழந்தது உங்களுக்கு தெரியுமா?