சாம் கான்ஸ்டாஸ் மீது விராட் கோலி மோதும் வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், ''இந்த விஷயத்தில் கோலி மீது தான் தவறு. அவர் தான் வேண்டுமென்றே சாம் கான்ஸ்டாஸ் மீது மோதுகிறார்'' என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் சிலரும் குற்றம்சாட்டுகின்றனர். அதாவது சாம் கான்ஸ்டாஸ் அவர் வழியில் நடந்து செல்ல, கோலி வேண்டுமென்றே அவருக்கு நேராக நடந்து வந்து தோளின் மீது மோதி வம்பிழுப்பதுபோல் வீடியோவில் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோலிக்கு வலுக்கும் எதிர்ப்பு
விராட் கோலி இந்த தொடர் முழுவதும் ஒரு சதத்தை தவிர, பெரிதாக ரன்கள் அடிக்காத நிலையில், ''உங்களின் ஆக்ரோஷத்தை எதிரணி வீரர்களை வம்பிழுத்து காட்டுவதை விட, பேட்டின் மூலம் ரன்கள் குவித்து காட்டுங்கள் கிங் கோலி'' என்று பலரும் கோலிக்கு அறிவுரை கூறி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங், மைக்கேல் வாகன் கோலியை குற்றம்சாட்டியுள்ளனர்.