இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 21 வயதான இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலிய பாஸ்ட் பவுலர்களின் பந்துகளை விளாசித் தள்ளி அதிரடி சதம் (114 ரன்கள்) அடித்தார். ஒரு கட்டத்தில் 221/7 என்று தத்தளித்த இந்திய அணியை 369 ரன்கள் குவிக்க உதவினார். தனது முதல் டெஸ்ட் போட்டித் தொடரிலேயே சதம் அடித்து அசத்திய நிதிஷ் குமார் ரெட்டி, 2021ம் ஆண்டு சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவினார் என்பது உங்களுக்கு தெரியுமா?
24
CSK Team
சிஎஸ்கே வெற்றி பெற உதவினாரா?
கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல்லில் துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 192 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே வீரர் டாப் டூ பிளஸ்சிஸ் 59 பந்தில் 86 ரன்கள் அடித்தார். பின்பு ஆடிய கொல்கத்தா 165 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த கோப்பையை வெல்ல தான் நிதிஷ் குமார் ரெட்டி உதவி புரிந்துள்ளார். சிஎஸ்கே பிளேயிங் லெவனிலேயே ஆடாத ஒருவர் எப்படி கோப்பையை வெல்ல உதவ முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் கேட்டபடி நிதிஷ் குமார் ரெட்டி சிஎஸ்கே பிளேயிங் லெவனில் விளையாடாமல் இருக்கலாம். ஆனால் அவர் 2021 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் நெட் பவுலராக இருந்தார். அந்த தொடர் முழுவதும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் வலைப்பயிற்சியின்போது பந்துவீசிய பவுலர்களில் நிதிஷ் குமார் ரெட்டி முதன்மையானவர்.
வலைப்பயிற்சியின்போது சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் நிதிஷ் குமார் ரெட்டியின் பவுலிங்கை அதிகம் எதிர்கொண்ட நிலையில், அது போட்டிகளின்போது எதிரணி வீரர்களின் பந்துவீச்சை திறம்பட சமாளிப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது. ஒரு அணியின் வெற்றிக்கு நெட் பவுலர்களின் பங்களிப்பு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் சிஎஸ்கே 2021ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல நிதிஷ் குமார் ரெட்டி மறைமுகமாக உதவி செய்துள்ளார்.
44
Nitish Kumar Reddy Batting
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
இப்படி 2021 ஐபிஎல் சீசனில் நெட் பவுலராக இருந்த நிதிஷ் குமார் ரெட்டியை 2023ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. பின்பு 2024ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 13 போட்டிகளில் இரண்டு அரைசதத்துடன் 303 ரன்கள் எடுத்த நிதிஷ் குமார் ரெட்டி, 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார். இதனால் கடந்த நவம்பர் மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ரூ.6 கோடிக்கு தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.