ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கியதால் இரு அணிகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.
முதலில் பேட்டிங் ஆடிவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் பவுண்டரிகளாக விளாசி, அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஜெய்ஸ்வால் - பட்லரின் அதிரடியால் பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 68 ரன்களை குவித்தது.
கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 பவுண்டரிகளை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல்லில் முதல் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார். கேகேஆருக்கு எதிரான ஒரு ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரின் 6 பந்துகளிலும் பவுண்டரிகள் அடித்த பிரித்வி ஷா முதலிடத்தில் உள்ளார். டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக ஆடம் கில்கிறிஸ்ட் முதல் ஓவரில் 5 பவுண்டரிகள் அடித்து 2ம் இடத்தில் இருந்தார். இந்த போட்டியின் முதல் ஓவரில் 5 பவுண்டரிகள் அடித்த சஞ்சு சாம்சன் 2ம் இடத்தை கில்கிறிஸ்ட்டுடன் பகிர்ந்துள்ளார்.