ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 2 அணிகளும் ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்துகின்றன. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது.
5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனின் முதல் போட்டியில் ஆர்சிபியிடம் தோற்றதால் 2வது போட்டியில் ஜெயிக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. ஆனால் அது அந்த அணிக்கு அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் இன்று அதன் சொந்த மைதானமான மும்பை வான்கடேவில் எதிர்கொள்ளவிருப்பது, அதன் பரம எதிரி அணியான சிஎஸ்கேவைத்தான்.
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டி என்றாலே மிகக்கடுமையாக இருக்கும். ஐபிஎல்லில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டி இந்த 2 அணிகள் மோதும் போட்டிதான். சிஎஸ்கே அணி இந்த சீசனின் முதல் போட்டியில் தோற்றிருந்தாலும், 2வது போட்டியில் வெற்றி பெற்று, அதே நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.
இரு சாம்பியன் அணிகளும் மோதுவதால் இந்த போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். முதல் போட்டியில் தோல்வியை தழுவியிருந்தாலும் கூட, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. சிஎஸ்கே அணியில் பொதுவாகவே மாற்றம் செய்யப்படாது.
உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நெஹல் வதேரா, ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான்.
உத்தேச சிஎஸ்கே அணி:
டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, மிட்செல் சாண்ட்னெர், தீபக் சாஹர், ஹங்கர்கேகர்.