201
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஐசிசி 50 ஓவர் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் கோலாகலமாக நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பை, ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று வந்தாலும் உலகக் கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடர் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
2011 உலகக் கோப்பை சிக்ஸர்
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்தியா அதன் பிறகு உலகக் கோப்பையை வெல்ல போராடி வருகிறது. இந்த முறை கண்டிப்பாக உலகக் கோப்பையை கைப்பற்றி சரித்திரம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை கிரிக்கெட் வாரியம்
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது.
மும்பை வான்கடே ஸ்டேடியம்
இதில், அதிகபட்சமாக மகிலா ஜெயவர்தனே 103 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து ஆடிய இந்திய அணிக்கு சேவாக் (0), சச்சின் (18), காம்பிர் (97), விராட் கோலி (35) என்று ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
எம் எஸ் தோனி
அதன் பிறகு தோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். 48.2ஆவது ஓவரில் தோனி சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்தது.
எம் எஸ் தொனி சிக்ஸர்
உலகக் கோப்பை வரலாற்றில் சிக்ஸருடன் பினிஷிங் செய்த முதல் வீரர் என்ற வரலாற்றையும் தோனி படைத்தார். இந்நிலையில் உலகக் கோப்பை ஃபைனலில் தோனி அடித்த சிக்சர் விழுந்த இருக்கைக்கு அவருடைய பெயரை சூட்டி கௌரவித்துள்ளது.
மும்பை கிரிக்கெட் வாரியம்
குறிப்பாக தோனியின் பெயர் நிரந்தரமாக பொறிக்கப்படும் அந்த இருக்கைகள் ஜே 282 முதல் ஜே 286 வரையிலான இருக்கைகள் இனி காலத்திற்கும் வேறு எந்த ரசிகரும் அமராத வகையில் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்ட உள்ளது.
2011 உலகக் கோப்பை கிரிக்கெட்
அந்த 6 இருக்கைகளை நீக்கப்பட்டு அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பணிகளை சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி சிஎஸ்கே ஜெர்சியில் வந்து தோனி திறந்து வைத்துள்ளார். அவருக்கு மும்பை கிரிக்கெட் வாரியம் நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.