இந்தியாவின் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் அபாயகரமான பேட்ஸ்மேன். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக, இந்திய அணியிலும் இடம்பிடித்து கடந்த 2 ஆண்டுகளாக அபாரமாக ஆடிவருகிறார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் ஆடி 3 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். ஆனால் அண்மைக்காலமாக பேட்டிங்கில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். ஆஸி.,க்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஆடாததால் அவருக்கு பதிலாக ஆடிய சூர்யகுமார் யாதவ், 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்தார். அது அவருக்கு தன்னம்பிக்கை குறைவை ஏற்படுத்தியது.
IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் 3வது வீரர்..! சேவாக்கே செய்யாத சாதனையை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் குறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், எப்பேர்ப்பட்ட வீரரின் கெரியரிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் மிகப்பெரிய மேட்ச் வின்னர். பெரிய போட்டிகளை ஜெயித்து கொடுக்கக்கூடிய வீரர். ஆஸ்திரேலிய அணிக்கு ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் என்ன மாதிரியான பங்களிப்பை செய்தாரோ, அதேமாதிரி பங்களிப்பை இந்திய அணிக்கு செய்யக்கூடியவர் சூர்யகுமார் யாதவ். எனவே அவரை கண்டிப்பாக உலக கோப்பையில் இந்திய அணி ஆடவைக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.