2020 முதல் தற்போது வரையில் அதிக முறை சதம் அடித்தவர்கள் யார் யார்?

First Published Jan 17, 2023, 4:25 PM IST

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்த ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை சதம் அடித்தவர்களில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
 

விராட் கோலி:

கடந்த 20202 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி வரையில் இந்திய அணியில் அதிகம் முறை சதம் அடித்தவர்களில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 3 முறை சதம் அடித்துள்ளார். அதில், 2 இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும், ஒன்று வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் அடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி படைத்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

ஸ்ரேயாஸ் ஐயர்:

கடந்த 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கே எல் ராகுல் தனது முதல் ஒரு நாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்தார். இந்தப் போட்டியில் அவர் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் ஸ்ரேயாஷ் ஐயர் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 டன் மணல், 5000 ஹாக்கி பந்துகள் கொண்டு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் புதிய உலக சாதனை!

சுப்மன் கில்:

இலங்கைக்கு எதிராக நடந்த 3 ஆவது ஒரு நாள் போட்டியில் ஒரு சதமும், அதற்கு முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இந்தப் போட்டியில் 97 பந்துகளில் 15 பவுண்டரிகள் ஒரு சிக்சர் உள்பட 130 ரன்கள் குவித்துள்ளார்.

Hockey World Cup 2023: டிராவில் முடிந்த அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா போட்டி!

கே எல் ராகுல்:

கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் சதம் அடித்தார். இந்தப் போட்டியில் அவர் 112 ரன்கள் குவித்திருந்தார். இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ராகுல் 108 ரன்கள் எடுத்திருந்தார்.
 

IND vs NZ: ஒருநாள் தொடரிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்..! மாற்று வீரர் அறிவிப்பு

click me!