விராட் கோலி
கடந்த 1988 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் பிறந்த விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ஒரு நாள், டெஸ்ட், டி20 போட்டி:
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி நடந்த டி20 போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
விராட் கோலி - 12,754 ரன்கள்:
தற்போது வரையில் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 8,119 ரன்களும், 115 டி20 போட்டிகளில் விளையாடி 4008 ரன்களும் குவித்துள்ளார். 268 ஒரு நாள் போட்டிகளில் 259 இன்னிங்ஸில் விளையாடி 12,754 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களில் விராட் கோலி 5ஆவது இடம் பிடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் - 18,426 (452 இன்னிங்ஸ், 49 சதம்)
குமார் சங்கக்கரா - 14,234 (380 இன்னிங்ஸ், 25 சதம்)
ரிக்கி பாண்டிங் - 13,704 (365 இன்னிங்ஸ், 30 சதம்)
சனத் ஜெயசூர்யா - 13430 (433 இன்னிங்ஸ், 28 சதம்)
விராட் கோலி - 12,754 (259 இன்னிங்ஸ், 46 சதம்)
ஜனவரி 15 விராட் கோலி தினம்:
ஜனவரி 15 ஆம் தேதியான நேற்று விராட் கோலி இலங்கைக்கு எதிராக 166 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இதே போன்று ஜனவரி 15 ஆம் தேதிகளில் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.
2017 - ஜனவரி 15 - இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 102 பந்துகளில் 122 ரன்கள் அடித்துள்ளார்.
2018 - ஜனவரி 15 - தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 217 பந்துகளில் 153 ரன்கள் எடுத்துள்ளார்.
2019 - ஜனவரி 15 - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 112 பந்துகளில் 104 ரன்கள் எடுத்துள்ளார்.
2023 - ஜனவரி 15 - இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்துள்ளார்.
கிரிக்கெட் உலகத்தில் ஜனவரி 15ம் தேதியை விராட் கோலி தினம் என்று கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 15 என்றாலே வெறியாட்டம் ஆடும் கோலி..! பிரமிக்க வைக்கும் கோலியின் ஜனவரி 15 வரலாறு
6 ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி:
இலங்கைக்கு எதிராக நடந்த கடைசி 6 ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி
96 பந்துகளில் 131 ரன்கள்
116 பந்துகளில் 110 ரன்கள் (நாட் அவுட்)
41 பந்துகளில் 34 ரன்கள் (நாட் அவுட்)
87 பந்துகளில் 113 ரன்கள்
9 பந்துகளில் 4 ரன்கள்
110 பந்துகளில் 166 ரன்கள் (நாட் அவுட்)
6 போட்டிகளில் மொத்தமாக 558 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள் அடங்கும்.
ஆட்டநாயகன், தொடர் நாயகன்:
2023 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச போட்டிகளில்:
அதிக ரன்கள் எடுத்தவர் - விராட் கோலி
அதிக முறை 100 ரன்கள் எடுத்தவர் - விராட் கோலி
பெஸ்ட் ஆவரேஜ் - விராட் கோலி
அதிக முறை பவுண்டரிகள் விளாசியவர் - விராட் கோலி
அதிக முறை (20) ஆட்டநாயகன் விருது பெற்றவர் - விராட் கோலி
அதிக முறை தொடர் நாயகன் விருது பெற்றவர் - விராட் கோலி
இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டி:
சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 74 சதங்கள் விளாசியுள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 46 சதங்கள் விளாசியுள்ளார்.
அதிக முறை (20) ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
சொந்த மண்ணில் நடந்த போட்டிகளில் அதிக சதங்கள் (21 முறை) அடித்தவர் விராட் கோலி.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காமல் 3ஆவது இடத்தில் களமிறங்கி ஒருநாள் போட்டிக்ளில் 150 ரன்களுக்கு மேல் 5 முறை அடித்துள்ளார்.
அதிகமுறை ஆட்டமிழக்காத சதங்கள் மொத்தம் 16.
அதிவேகமாக 150 ரன்கள்
இந்தியாவில் நடந்த ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்துள்ளார். 106 பந்துகளில் 150 ரன்கள் குவித்துள்ளார். நேற்றைய போட்டியில் மட்டும் 110 பந்துகளில் 166 ரன்கள் (நாட் அவுட்) எடுத்துள்ளார்.