வெறும் 27 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்! டெஸ்ட்டில் குறைந்த ரன்னில் ஆல் அவுட்டான டாப் 10 அணிகள்!

Published : Jul 15, 2025, 10:32 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 27 ரன்னில் சுருண்ட நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ரன்னில் ஆல் அவுட்டான டாப் 10 அணிகள் குறித்து பார்போம்.

PREV
14
Top 10 Teams With Lowest Totals In Test cricket

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 27 ரன்களுக்கு சுருண்டு மிக மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 204 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 27 ரன்னில் சுருண்டு 176 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த அணி வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ் (11 ரன்) மட்டும் இரட்டை இலக்கத்தை தாண்டினார். கேப்டன் ரோஸ்டன் சேஸ் உள்பட 7 வீரர்கள் டக் அவுட்டானார்கள்.

24
மோசமான சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் எடுத்த 27 ரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். ஆனால் இதைவிட குறைந்த ஸ்கோரை பதிவு செய்து மோசமான பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. 1955ம் ஆண்டு ஆக்லாந்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 26 ரன்னில் ஆல் அவுட்டாகி டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ரன்களை பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை இன்றளவும் தன்வசம் வைத்துள்ளது.

குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான 10 அணிகள்

டெஸ்ட் வரலாற்றில் குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான 10 அணிகள் குறித்து பார்ப்போம். நாம் முன்னே சொன்னபடி நியூசிலாந்தின் 26 ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத மிகக் குறைந்த ஸ்கோராக உள்ளது. ஈடன் பார்க்கில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணியை வெறும் 27 ஓவர்களில் வீழ்த்தி வரலாறு படைத்தனர். 

2வது இடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி. ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் பந்துவீச்சில் வெறும் 14.3 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் முடங்கிப் போனது. ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக டக் அவுட்டுகள் ( 7 பேர் டக் அவுட்) என்ற மோசமான சாதனையையும் வெஸ்ட் இண்டீஸ் படைத்தது.

34
தென்னாப்பிரிக்காவின் சோகம்

3வது இடத்தில் தென்னாப்பிரிக்கா உள்ளது. 1896ல் கெபெர்ஹாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 30 ரன்களில் சுருண்டது. 4வது இடத்திலும் தென்னாப்பிரிக்கா தான். 1924ல் எட்ஜ்பாஸ்டனில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஸ்விங் பந்துவீச்சில் சரிந்த தென்னாப்பிரிக்கா 30 ரன்களில் அடங்கியது.

ஆஸ்திரேலியாவும் லிஸ்ட்டில் இருக்கு

துரதிருஷ்டவசமாக இந்த மோசமான பட்டியலில் 5வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா 1899ல் சொந்த மண்ணான கேப்டவுனில் இங்கிலாந்துக்கு எதிராக 35 ரன்னில் ஆட்டமிழந்தது. இதே பட்டியலில் 6வது இடத்திலும் உள்ள தென்னாப்பிரிக்கா 1932ல் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 7வது இடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. 1902ல் பர்மிங்காமில் நடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 36 ரன்னில் அடங்கியது.

44
இந்தியாவுக்கும் இடம் உண்டு

இந்த மோசமான பட்டியலில் 8வது இடத்தில் நமது இந்திய அணி உள்ளது. 2020ம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 36 ரன்னில் சுருண்டு மோசமான சாதனை படைத்தது. 9வது இடத்தில் உள்ள கத்துக்குட்டியான அயர்லாந்து அணி லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக 38 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 

கடைசியாக 10வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி சொந்த மண் வெலிங்டனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 42 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

Read more Photos on
click me!

Recommended Stories