முடிஞ்சா என்னை அவுட்டாக்கி பாரு! மனம் தளராமல் போராடிய பும்ரா! குவியும் பாராட்டு!

Published : Jul 14, 2025, 08:46 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சூப்பராக பேட்டிங் செய்த ஜஸ்பிரித் பும்ராவை நெட்டிசன்கள் பாராட்டினார்கள்.

PREV
14
IND vs ENG: Netizens Praising Bumrah's Batting

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய அணி வெற்றிக்கு 193 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி இப்போது 162/9 என்ற நிலையில் உள்ளது. ஒருகட்டத்தில் 112/8 என்ற இக்கட்டான நிலைக்கு சென்ற அணியை ரவீந்திர ஜடேஜாவும், ஜஸ்பிரித் பும்ராவும் மீட்டனர். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலர்களை மாறி மாறி பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. கடைசியில் 54 பந்தில் 5 ரன் எடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனார்.

24
தூண் போல் நின்ற பும்ரா

அவுட் ஆனாலும் ஒருபக்கம் ஜடேஜா போராட பும்ரா அவருக்கு நீண்ட நேரம் கைகொடுத்தார். நிதிஷ் குமார் ரெட்டி அவுட் ஆனவுடன் மீதமிருக்கும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடலாம் என இங்கிலாந்து பவுலர்கள் நினைத்தனர். ஆனால் பும்ரா அதற்கு முட்டுக்கட்டை போட்டார். கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் ஆடிய பும்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், வோக்ஸ், கார்ஸ் மற்றும் ஸ்பின்னர் சோயிப் பஷிர் அனைத்து பவுலர்களின் பந்துகளையும் நேர்த்தியாக எதிர்கொண்டார்.

34
பும்ராவின் போராட்ட குணம்

இங்கிலாந்து பவுலர்கள் யார்க்கர், பவுன்ஸ் என மாறி மாறி போட்டுப் பார்த்தும் பும்ராவை அசைக்க முடியவில்லை. பும்ரா 50 பந்துகளுக்கு மேல் ஆடி இங்கிலாந்து பவுலர்களை பெரும் சோதனையில் ஆழ்த்தினார். முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் பும்ரா மிக சாதாரணமாக பந்துகளை ஸ்டோக் வைத்தார். அது மட்டுமின்றி ஆர்ச்சரின் ஷாட் பாலில் ஒரு பவுண்டரியும் விளாசினார். தனது வழக்கமான பந்துவீச்சு திறனைத் தாண்டி, ஒரு பேட்ஸ்மேனாக அவர் வெளிப்படுத்திய போராட்ட குணம் இந்திய ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது

44
பும்ராவுக்கு குவியும் பாராட்டு

மேலும் 10 விக்கெட்டுக்கு களமிறங்கி சேனா நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) அதிக பந்துகளை எதிர்கொண்ட 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும் பும்ரா படைத்தார். பும்ராவின் போராட்டத்தை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். 

இந்திய அணி நெருக்கடியான நிலையில் சிக்கும்பொதெல்லாம் பும்ரா பவுலிங்கில் கைகொடுத்து காப்பாற்ற்றுவார். ஆனால் இப்போது பேட்டிங்கிலும் கடைசி வரை போராடி அணியை தூக்கி நிறுத்தினார் என்று ரசிகர்களும், நெட்டிசன்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories