அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட்.. அபார சாதனை படைத்த ஆஸி., ஸ்பின்னர் டாட் மர்ஃபி..! லெஜண்ட்ஸ் பட்டியலில் இணைந்தார்

First Published | Feb 10, 2023, 3:54 PM IST

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய ஆஸ்திரேலிய ஸ்பின்னர் டாட் மர்ஃபி, அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்திய இளம் ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் டென்னிஸ் லில்லிக்கு அடுத்து 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் அறிமுகமாகினர். ஆஸ்திரேலிய அணியில் இளம் ஸ்பின்னர் டாட் மர்ஃபி அறிமுகமானார்.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேன் அதிகபட்சமாக 49 ரன்கள் அடித்தார். ஸ்மித் 37 ரன்களும், அலெக்ஸ் கேரி 36 ரன்களும் அடித்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியர்கள் நாங்க ரொம்ப நேர்மையா நடப்போம்.. ஆனால் இந்திய அணி அப்படி இல்ல! பாண்டிங் பகிரங்க குற்றச்சாட்டு

Tap to resize

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியில் கோலி(12), புஜாரா(7) ஆகிய பெரிய வீரர்கள் சொதப்பியபோதிலும், கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ரோஹித் சர்மா 120 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஜடேஜா அரைசதம் அடித்து ஆடிவருகிறார்.  இந்திய அணி 300 ரன்களை நோக்கி ஆடிவருகிறது.

IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம்.. முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ்

இந்த போட்டியில் அறிமுகமான டாட் மர்ஃபி, கோலி, புஜாரா, ராகுல், அஷ்வின், கேஎஸ் பரத் ஆகிய 5 வீரர்களையும் வீழ்த்தினார். அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார் டாட் மர்ஃபி. அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய இளம் வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் டாட் மர்ஃபி. ஆஸ்திரேலிய லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் டென்னிஸ் லில்லி முதலிடத்தில் உள்ளார். 22 வயது 86 நாட்களான டாட் மர்ஃபி இந்த பட்டியலில் டென்னிஸ் லில்லிக்கு அடுத்து 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
 

Latest Videos

click me!