ஆஸ்திரேலியர்கள் நாங்க ரொம்ப நேர்மையா நடப்போம்.. ஆனால் இந்திய அணி அப்படி இல்ல! பாண்டிங் பகிரங்க குற்றச்சாட்டு

First Published | Feb 10, 2023, 3:11 PM IST

பிட்ச்சை தயார் செய்வதில் ஆஸ்திரேலியா மிக நேர்மையுடன் நடந்துகொள்வதாகவும், ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய அணி பிட்ச்சை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 177 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாகவே மார்னஸ் லபுஷேன் 49 ரன்கள் தான் அடித்தார். ஸ்மித் 37 ரன்களும், அலெக்ஸ் கேரி 36 ரன்களும் அடித்தனர்.
 

இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

Tap to resize

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 120 ரன்களை குவித்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இந்திய அணியிலும் ரோஹித்தை தவிர வேறு எந்த வீரரும் சரியாக பேட்டிங் ஆடவில்லை.

IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம்.. முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ்

இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அதற்கு தகுந்த அணி மற்றும் தயாரிப்புகளுடன் தான் வந்தது ஆஸ்திரேலிய அணி. நேதன் லயன், அஷ்டான் அகர், டாட் மர்ஃபி ஆகிய ஸ்பின்னர்களுடன் வந்ததுடன், வலைப்பயிற்சியில் அஷ்வின் மாதிரியான ஒரு ஸ்பின்னரை வைத்து பயிற்சி மேற்கொண்டனர். ஆனாலும் அந்த அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானதன் விளைவாக, ஆடுகளத்தின் மீது குறை கூற தொடங்கிவிட்டனர்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த, பிட்ச்சை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும், ஆனால் ஆஸ்திரேலிய அணி பிட்ச்சை தயார் செய்யும் பொறுப்பை முழுக்க முழுக்க மைதான ஊழியர்களிடமே கொடுத்துவிடுமே தவிர, ஆஸ்திரேலிய அணி தலையிடாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், ஆடுகளத்தை ஸ்பின்னிற்கு சாதகமாக தயார் செய்வதுதான் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியாவிற்கு இருக்கும் சிறந்த வழி.  அதற்கு காரணம், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுவார்கள் என்பது ஒரு காரணம். ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களை விட இந்திய ஸ்பின்னர்கள் சிறந்தவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணியில் ஆடும் 2 ஸ்பின்னர்களுமே ஆஃப் ஸ்பின்னர்கள். அதில் ஒருவர் அறிமுக வீரர். எனவே இந்திய அணிக்குத்தான் சாதகம் அதிகம். 

ரஞ்சி டிராபி: அரையிறுதியில் மயன்க் அகர்வால் அபார இரட்டை சதம்..! சௌராஷ்டிராவிற்கு எதிராக கர்நாடகா பெரிய ஸ்கோர்

ஆஸ்திரேலியாவில் பிட்ச்சை தயார் செய்வதில் ஆஸ்திரேலிய அணியின் தலையீடு இருக்கவே இருக்காது. மைதான ஊழியர்களே சிறந்த பிட்ச்சை தயார் செய்வார்கள். அதில் அணியின் குறுக்கீடு இருக்காது. ஆனால் இந்தியாவில் ஸ்பின்னிற்கு சாதகமாக ஆடுகளங்கள் தயார் செய்யப்படும். அதுதான் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான ஒரே வித்தியாசம் என்றார் ரிக்கி பாண்டிங்.

Latest Videos

click me!