Published : Feb 10, 2023, 01:31 PM ISTUpdated : Feb 10, 2023, 01:33 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து பார்டர் கவாஸ்கர் டிராபியில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கியது.
210
ரோகித் சர்மா
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. அதன்படி அந்த அணியில் லபுசேஞ்ச் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஆஸ்திரேலியா 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.
310
இந்தியா - ஆஸ்திரேலியா
இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா 3 பவுண்டரி அடித்து 12 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா எப்போதெல்லாம் அடித்து ஆட வேண்டுமோ அப்போதெல்லாம் பவுண்டரியும், சிக்சரும் விளாசினார். அதன் பிறகு தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
410
ரோகித் சர்மா
ஒரு கட்டத்தில் கேஎல் ராகுல் (20), ரவிச்சந்திரன் அஸ்வின் (23), புஜாரா (7), விராட் கோலி (12), சூர்யகுமார் யாதவ் (5) என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
510
பார்டர் கவாஸ்கர் டிராபி
ஆனால், ஒரு கேப்டனாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
610
கேப்டன் சதம்
அதுமட்டுமின்றி பார்டர் கவாஸ்கர் டிராபியில் தனது முதல் சதத்தை ரோகித் சர்மா பதிவு செய்துள்ளார். ஒரு கேப்டனாக அனைத்து பார்மேட் கிரிக்கெட்டிலும் சதம் அடித்தவர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 3ஆவது இடம் பிடித்துள்ளார்.
710
இங்கிலாந்து டெஸ்ட் சதம்
இதற்கு முன்னதாக திலகரத்னே தில்சன், பாப் டூ பிளசிஸ், பாபர் அசாம் ஆகியோருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா இணைந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
810
ஸ்டீவ் ஸ்மித் சாதனை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை சதம் அடித்தவர்களின் பட்டியலிலும் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.
விராட் கோலி - 74
டேவிட் வார்னர் - 45
ஜோ ரூட் - 44
ரோகித் சர்மா - 43
ஸ்டீவ் ஸ்மித் - 42
910
இந்தியா 189 ரன்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்துள்ளது. இதில் ரோகித் சர்மா 103 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 12 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
1010
ரோகித் சர்மா சாதனை
ஒரு தொடக்க ஆட்டக்காரராக 31 போட்டிகளில் 6 சதங்கள், 4 அரை சதங்கள் அடித்து மாஸ் காட்டியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தனது 9ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அனைத்து பார்மேட்டுகளிலும் சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.