இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கினர். ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் அடித்து 12 ரன்கள் விளாசினார். தொடர்ந்து பவுண்டரி விளாசிய ரோகித் சர்மா 66 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில், 8 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.